Viral
போலாம் ரைட்.. காளை மீது சவாரி.. இளைஞர் செய்த செயலால் அதிர்ந்து போன பொதுமக்கள்: எச்சரித்த போலிஸ்! (VIDEO)
பொதுவாக உலக அளவில் பல வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகி வரும். அது மக்கள் மத்தியில் வரவேற்பை பெரும். குறிப்பாக குடிபோதையில் குடிமகன்கள் செய்யும் பல நிகழ்வுகள் மக்களை கவர்ந்து சிரிக்கும் வகையில் இருந்துள்ளது. அதில் சில ஆபத்து விளைவிக்க கூடிய வகையிலும் இருந்துள்ளது. இவ்வாறு சிலர் போதையில் செய்யும் சில நிகழ்வுகள் நம்மை சிரிக்க வைக்கிறது.
அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது உத்தரகாண்டில் அரங்கேறியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு இளைஞர் ஒருவர் மது போதையில் இருந்துள்ளார். அப்போது தான் என்ன செய்கிறோம் என்பதை கூட அறியாமல், அருகில் இருந்த காளை மாடு ஒன்றின் மீது ஏறி அமர்ந்து குதிரை சவாரி செய்வது போல் செய்துள்ளார்.
சுமார் 16 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், இளைஞர் காளையின் மீது அமர்ந்து ரிஷிகேஷின் தெருக்களில் சவாரி செய்வது பதிவாகியிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதைத்தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதோடு பொதுமக்களும் தொடர்ந்து கண்டன கருத்துகள் தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் இது தொடர்பான வீடியோ குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அந்த நபரை கைது செய்தனர்.
பின்னர் அவருக்கு அறிவுரை வழங்கியும், இனி இது போல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தும் போலீசார் அவரை விடுதலை செய்துள்ளனர். உத்தரகாண்டில் மது போதையில் காளை மீது ஏறி சவாரி செய்த இளைஞர் தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் எச்சரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!