Viral

இனி FaceBook, Instagram-க்கு கட்டணம்.. பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Mark Zuckerberg: மாத சந்தா எவ்வளவு?

இணைய உலகில், நாம் அனைத்தையும் இணையவழியாகவே பெற முடிகிறது. தகவல் பரிமாற்றம் கூட நம்மால் இணைய வழியில் எளிமையாகச் செய்ய முடிகிறது. இது போன்ற செயலிகள் வெறும் தகவல் பரிமாற்றத்துடன் நின்றுவிடாமல், வீடியோ காலிங், போட்டோ வீடியோ பகிர்தல், வாய்ஸ் காலிங் வசதிகள் உள்ளிட்டவையும் பெற்றுள்ளது.

இது போன்ற செயலிகளை உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் மார்க் ஜூக்கர்பர்க்கால் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது இந்த சமூகவலைதள உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவையோடு நிறுத்திகொள்ளாமல் வாட்ஸ்அப் போன்ற போட்டி நிறுவனங்களை வாங்கி மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. மேலும், தனக்கு கீழ் செயல்படும் பேஸ்புக், வாட்ஸ்அப் ,இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து மெட்டா என்ற தாய் நிறுவனத்தை உருவாக்கினார் மார்க் ஜூக்கர்பர்க் ஜூக்கர்பர்க்.

இந்த மெட்டா நிறுவனத்தின் வருவாய் காரணமாக உலகபணக்காரர் வரிசையில் மார்க் ஜூக்கர்பர்க் ஜூக்கர்பர்க் இடம்பெற்றுள்ளார். மேலும், உலகின் முக்கிய நபர்களில் ஒருவராக இதன்மூலம் மார்க் ஜூக்கர்பர்க் ஜூக்கர்பர்க் உயர்ந்துள்ளார். இதனால் அவரின் பாதுகாப்புக்காக 10 மில்லியன் டாலர்களை மெட்டா நிறுவனம் செலவு செய்கிறது.

இந்நிலையில், மெட்டாவில் புளு டிக் வசதி பெற கட்டணம் வசூலிக்கப்போவதாக பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்துள்ளார். இது குறித்து மார்க் ஜூக்கர்பர்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காலை வணக்கம். இந்தவாரம் Meta Verifiedஐ நாங்கள் வெளியிட தொடங்குகிறோம்.

புளு டிக் கணக்கைப் பெற ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மாதம் ரூ.992.36 கட்டணமாகவும், ios பயனர்களுக்குக் கட்டணமாக ரூ.1240.66 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி எங்கள் சேவைகள் முழுவதும் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும். இந்த வாரம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வெளியிடுகிறோம். விரைவில் மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்த உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

இந்த புளு டிக் கட்டண வசதி பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் புளு டிக் பெற்றவர்களுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது டிவிட்டரை போன்று, மெட்டாவும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது உலகம் முழுவதும் உள்ள அதன் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “என்னையும் ஸ்டேட்டஸ் வெக்க வெச்சிடீங்கள்ள?” - மீம்ஸ் போட்டு மார்க்-ஐ கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்..!