Viral
ரூ.200 கேட்டால் ரூ.500 கொடுத்த ATM.. வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் தாராளமாக வழங்கியதால் பரபரப்பு!
சென்னை அடுத்த அம்பத்தூர் பழைய சி.டி.எச் சாலையில் இந்தியன் வங்கியின் கிளை ஒன்று உள்ளது. அதே இடத்தில் அந்த வங்கியின் ATM மையமும் உள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் தினமும் பணம் எடுத்துச் செல்வது வழக்கம்.
அதன்படி இன்று பாலசுப்ரமணி என்பவர் பணம் எடுக்க ATM மையத்திற்கு வந்துள்ளார். அவர் ரூ. 8 ஆயிரம் பணம் எடுக்க முயற்சி செய்தபோது ரூ.12 ஆயிரம் வந்தது. இதனால் அவர் குழப்பம் அடைந்தார்.
அதேபோன்று, திருமுல்லைவாயிலை சேர்ந்த சந்திரசேகர் ரூ. 8 ஆயிரம் பணம் எடுக்கும்போது அவருக்கு ரூ.20 ஆயிரம் வந்துள்ளது. இப்படி ATM ல் பணம் எடுத்த வந்த அனைவருக்கும் கூடுதலாகப் பணம் வந்துள்ளது. இதனால் பலரும் குழப்பமடைந்து வங்கி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் வந்து சோதனை செய்தபோது எந்திரத்தின் கோளாறு காரணமாகவே இந்த தவறு நடந்துள்ளது தெரிந்தது. இதையடுத்து கூடுதல் பணம் எடுத்த வாடிக்கையாளர்கள் அந்த பணத்தை மீண்டும் வங்கி நிர்வாகத்திடமே ஒப்படைத்தனர்.
இந்த பற்றி வங்கி அதிகாரிகள் கூறுகையில், "ATM இயந்திரத்தில் ரூ.200 வைக்க வேண்டிய ட்ரேவில் ரூ. 500 நோட்டுகளை வைத்ததால் இந்த தவறு நடந்துள்ளது. இனி இதுபோன்று நடக்காது" என தெரிவித்துள்ளனர். ATM இயந்திரத்தில் குறைந்த தொகை எடுக்க முயற்சி செய்து அதிகப் பணம் வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!