Viral
இனி சுவற்றில் சிறுநீர் கழித்தால் அவ்வளவுதான்.. சம்பவ இடத்திலேயே உடனடியாக பதிலடி.. வருகிறது மர்ம சுவர் !
பொதுவாக ஆங்காங்கே பொது இடத்தில் அசுத்தம் செய்யாதீர் என்றும், சிறுநீர் கழிக்காதீர் என்றும் வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இது ஒரு இடத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இருப்பினும் சிலர் அந்த வாசகம் பொருந்திய இடத்தில் வேண்டுமென்றே சிறுநீர் கழிப்பர். இது மிகவும் கண்டனத்திற்குரிய செயல் என்று பொது விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனை கண்டுகொள்ளாமல் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது என்று இருக்கின்றனர். இந்த நிலையில் இதனை தடுக்கும் விதமாக லண்டன் பகுதியில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் சிட்டி கவுன்சில் என்ற பகுதியில் பொதுமக்கள் பலரும் சாலையோரம், சுவற்றில் சிறுநீர் கழித்துவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து அந்த பகுதிவாசிகள் புகார்கள் கொடுத்து வந்தனர். இதனால் அந்த பகுதியிலுள்ள அதிகாரிகள் புதிய யுக்தியை கையாள என்ணியுள்ளனர்.
அதன்படி அங்கிருக்கும் குறிப்பிட்ட உணவகங்கள், திரையரங்குகள் என சில இடங்களில் சுவர்களின் ஒரு ரசாயனம் கலந்த ஸ்பிரே அடித்து பெயிண்ட் அடித்துள்ளனர். அந்த ஸ்பிரே நம்ம ஊர் பெயிண்ட் விளம்பரங்களில் வருவது போல், சுவரை தண்ணீரில் இருந்து பாதுகாக்கும் என சொல்லப்படுகிறது. அதோடு இந்த பெயிண்ட் அடித்த சுவர்களில் படும் நீரானது, அதில் படியாமல் திருப்பி தெளித்து விடும்.
எனவே இந்த பெயிண்டை சாலையில் இருக்கும் சுவர்களுக்கு அடிக்க முனைப்பு காட்டி வருகின்றனர். அவ்வாறு இந்த பெயிண்ட் சாலையில் அடிக்கப்பட்டால், சிறுநீர் கழிக்கும்போது, அதே நீர் அவர்கள் மீது திருப்பி தெளிக்கும். அதனால் இந்த ஸ்பிரே பெயிண்டை அடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதோடு இந்த சிறப்பு வகை பெயிண்ட் அடிக்கப்பட்டு சுவர்களில் "இந்தச் சுவர் சிறுநீர் கழிப்பிடம் இல்லை" என்ற செய்தியுடன் அறிவிப்பு பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் தெருக்களை சுத்தம் செய்வதற்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட £1 மில்லியன் பவுண்ட் ($1.24 மில்லியன் டாலர்) செலவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!