Viral
ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே மாட்டிக் கொண்ட ஆந்திர மாணவி.. மீட்கப்பட்டது எப்படி ? - திக் திக் VIDEO !
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா பகுதியை அடுத்துள்ளது அன்னவரை என்ற பகுதி. இந்த பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவர் துவ்வாடாவில் என்ற பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் MCA முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வழக்கமாக குண்டூர் - ராயகடா விரைவு ரயிலில் தினமும் கல்லூரிக்கு செல்வார்.
இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் கல்லூரி செல்வதற்காக இதே இரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது துவ்வாடா இரயில் நிலையத்திற்கு இரயில் வந்து நின்றுள்ளது. அந்த சமயத்தில் அவசரமாக இறங்கிய சசி, கால் இடறி ரயிலுக்கும் - நடைமேடைக்கும் இடையில் மாட்டிக்கொண்டார்.
இந்த விபத்தில் அவரது கால் தண்டவாளத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவித்து வந்தார். இரயிலின் இடையில் சிக்கிய அவரை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை வெளியே எடுக்க முயன்றனர். இருப்பினும் முடியாத காரணத்தினால், உடனே இது குறித்து இரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், மாணவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் மாணவியின் உடல் மாட்டிகொண்ட நிலையில், அவரை வெளியே எடுக்க கடினபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு, நடைமேடை சுவரை உடைத்து மாணவி பத்திரமாக மீட்டனர். பின்னர் ஆம்புலன்சை வரவைத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு மாணவியை அழைத்து சென்றனர்.
தற்போது அந்த மாணவி நலமாக இருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாக இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவத்தால் குண்டூர் - ராயகடா விரைவு ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதாக புறப்பட்டது.
முன்னதாக இதே போல் கர்நாடகாவில், தாயும் மகனும் இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது திடீரென சரக்கு இரயில் ஒன்று வந்துள்ளது. அப்போது அதில் சிக்கியிருந்த தாய் மற்றும் மகன் சாதூர்யமாக உயிர் தப்பிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!