Viral
பாகனை தூக்கி வீசிய கேரள யானை.. வேட்டியால் உயிர்பிழைத்த அதிசயம்.. Photoshoot-ன் போது பரபரப்பு ! | Video
கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற கோயிலான குருவாயூர் கோயில். இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்த்ர்கள் வந்து வழிபடுவது வழக்கம். மேலும் பலரும் இந்த கோயிலில் வைத்து திருமணம் செய்வது வழக்கம்.
அப்படி தான் சம்பவத்தன்றும் இந்த கோயிலில் சில ஜோடிகள் திருமணம் செய்துள்ளனர். அப்படி திருமணம் செய்த ஜோடி ஒன்று, கோயில் வளாகத்தில் வைத்து போட்டோ ஷூட் எடுத்துள்ளனர். அப்போது அந்த கோயிலில் இருக்கும் தாமோதர தாஸ் என்ற யானை சென்று கொண்டிருந்தது. யானையின் மேல் ஒரு பாகனும், அருகே ராதாகிருஷ்ணன் என்ற இன்னொரு பாகனும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது யானை பின்னால் வர, இந்த திருமண ஜோடியோ முன்னாள் செல்ல ஒரு அருமையான போட்டோ ஷூட் எடுக்கப்பட்டது. அப்படி எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், போட்டோவின் பிளாஷ் லைட் யானையின் கண்ணில் பட, உடனே பயந்துபோன யானை மிரண்டது.
பின்னர் அருகே நின்று கொண்டிருந்த மற்றொரு பாகனான ராதாகிருஷ்ணனை அலேக்காக தூக்கியது. யானை தூக்கியதில் அதன் தும்பிக்கையில் பாகனின் வேட்டி மட்டும் சிக்கிவிட பாகன் தொப்பென்று கீழே விழுந்தார். இதில் நூலிழையில் அந்த பாகன் தப்பித்துள்ளார். இதையடுத்து அடிபட்ட பாகனும், அந்த திருமண ஜோடியும் உடனே அங்கிருந்து தெறித்து ஓடி விட்டனர்.
இதைத்தொடர்ந்து யானை மீது அமர்ந்திருந்த பாகன், அந்த யானை கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்த சம்பவத்தால் அந்த கோயிலில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ, திருமண ஜோடி போட்டோ ஷூட்டின் போது எடுக்கப்பட்டது. தற்போது இது வைரலாகி வருகிறது.
Also Read
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!
-
டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?
-
பழனிசாமியின் பேச்சு: கூவத்தூர் முதல் கொரோனா வரை.. அதிமுகவின் கோரத்தை புட்டுப்புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி