Viral
பிறக்கும் போதே 30 வயது.. அமெரிக்க தம்பதிக்கு இரட்டை குழந்தைகள்.. மருத்துவ உலகத்தில் புதிய சாதனை!
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தைச் சேர்ந்த தம்பதியினர் பிலிப் ரிட்ஜ்வே - ரேச்சல் ரிஜ்வே. இந்த தம்பதிக்கு 5 வயதில் லிடியா, 11 வயதில் அவுன்ஸ் என்ற இரண்டு பெண் குழந்தைகளும், 6 வயதில் திமோதி, 7 வயதில் அவுன்ஸ் என்ற இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், இந்த தம்பதிக்குச் செயற்கை முறை கருத்தரித்தலில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அதுவும் இந்த குழந்தைகள் 30 வருடங்களுக்கு முன்பு 1992ம் ஆண்டிலிருந்து பூஜ்ஜியத்திற்குக் கீழ் 200 டிகிரியில் கிரையோபிரிசர்வ் செய்யப்பட்ட கருமுட்டையிலிருந்து பிறந்துள்ளனர்.
மேலும் இந்த கருமுட்டை 2007ம் ஆண்டு வரை வெஸ்ட் கோஸ்ட் கருவுறுதல் ஆய்வகத்தில் பாதுகாக்கப்பட்டுவந்துள்ளது. பிறகு அந்த தம்பதியினர் கரு முட்டையைத் தேசிய கருமுட்டை தான மையத்திற்கு கானமாக வழங்கப்பட்டது. இங்கிருந்ததான் லிப் ரிட்ஜ்வே - ரேச்சல் ரிஜ்வே தம்பதிக்கு கருமுட்டை தானமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த கருமுட்டையில் இருந்துதான் இவர்களுக்குக் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிறந்த ஆண் குழந்தைக்கு திமோத்தி, பெண் குழந்தைக்கு லிடியா என பெயர் வைத்துள்ளனர்.
தற்போது உலகிலேயே வயதான குழந்தை இவர்கள்தான். இதற்குக் காரணம் 1992ம் ஆண்டிலிருந்து உறைய வைக்கப்பட்ட கருமுட்டையிலிருந்து பிறந்ததால் இந்த குழந்தைகளுக்கு 30 வயது என சொல்லப்படுகிறது. மேலும் 27 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கருமுட்டையிலிருந்து 2020ம் ஆண்டு பிறந்த மோலி கிப்சனின் சாதனையை இந்த குழந்தைகள் முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்துப் பேசிய இரட்டை குழந்தைகளின் தந்தை ரிட்ஜ்வே, " அதிக நாட்கள் பதப்படுத்தப்பட்ட கருமுட்டைகளை நாங்கள் தேடவில்லை. இவர்கள் எங்களுடைய குழந்தைகள் என்றாலும் எங்களுடைய மூத்த குழந்தைகள். இவர்களுக்கு கருவில் இருக்கும்போது எனக்கு 5 வயதுதான் இருந்தது. அன்றிலிருந்தே இந்த உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!
-
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!