Viral
150 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம்.. காதலியை கரம்பிடித்த கோவை இளைஞர்: புதுமாப்பிள்ளை சொன்ன ஆச்சரிய பதில்?
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவசூர்யா. இளைஞரான அவர் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியலாளராக பணியாற்றி வருகிறார். மேலும் சுற்றுச்சூழல் மற்றும் உடல் நல ஆரோக்கியம் குறித்து இந்தியாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் கேரள மாநிலத்தை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவர் வீட்டார் சமதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதன் படி கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் இவர்களது திருமணம் நடத்துவது என இரு வீட்டாரும் முடிவு செய்தனர். இதையடுத்து சிவசூர்யா தனது திருமணத்திற்காகக் கோவையிலிருந்தே 150 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்தும் காதலியை கரம் பிடித்துள்ளார்.
பிறகு திருமண முடிந்து கேரளாவில் இருந்தும் சிவசூர்யா சைக்கிளிலேயே கோவை வந்துள்ளார். மணமகள் வீட்டார் காரில் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். இது குறித்துப் பேசிய சிவசூர்யா, "எனது தந்தை 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து உடல் ஆரோக்கியத்தை பொதுமக்களுக்கா எடுத்துச் செல்லும் வகையில் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்து வருகிறேன். சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குஜராத்தில் இருந்து கோவைக்கு 10 நாட்களில் 1902 கி.மீ சைக்கிள் பயணம் செய்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
தற்போது திருமணங்கள் ஆடம்பரமாக மாறிவிட்டது. பல வகை உணவு, பிரம்மாண்ட அலங்காரங்கள் இருக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே இன்னும் எளிமையான முறையில் திருமணம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் எளிமையாகக் கோவிலில் திருமணம் செய்ததுடன் சுற்றுச்சூழல் மற்றும் உடல் நல ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது திருமணத்திற்கு 150 கி.மீ துரம் சைக்கிளில் பயணம் செய்த கோவை இளைஞர் சிவசூர்யாவின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதையடுத்து அவரை பலரும் பாராட்டி திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!