Viral
விபத்தில் சிக்கிய பிரபல பைக் Rider.. அதிவேகமாக சென்று மோதியதில் 79 வயது முதியவர் பரிதாப பலி!
தமிழ்நாட்டில் TTF வாசனைபோன்று இந்தியாவின் மிகவும் பிரபலமான பைக் ரைடராக இருப்பவர் ஜாட் பிரப்ஜோத். இவர் சூப்பர் பைக்குகளில் இந்தியாவின் பல்வேறு சாலைகளில் பயணம் செய்துள்ளார்.
மேலும் இந்த பயணங்கள் குறித்து தனது யூடியூப் சேனலில் வீடியோவாகவும் வெளியிட்டு வருகிறார். இதனால் இவரது யூடியூப் சேனலை 3 மில்லியனுக்கு மேல் சந்தாதாரர்கள் பின்தொடர்கின்றனர். மேலும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதங்களில் 1.2 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.
இந்நிலையில் இவர் கடந்த 25ம் தேதி டெல்லியில் இருந்து நேபாளத்திற்கு Kawasaki H2 என்ற இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள கஜூரி பகுதியில் அதிவேகமாக சென்றபோது சாலையில் சென்ற 79 வயது முதியவர்மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேபோல் ஜாட் பிரப்ஜோத் கஜூரிக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு அவரை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் காத்மாண்டுவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!