Viral
அமேசான் நிறுவனம் மீது புகார் கொடுத்த இணையவாசி.. சிறிய தவறால் நேர்ந்த குழப்பம்.. நெட்டிசன்கள் கிண்டல் !
பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனம், ஐ-பேடுக்கு அதிக விலை போடுவதாக ட்விட்டர்வாசி ஒருவர் நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்குப் பதிலாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை டேக் செய்து புகார் அளித்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு அன்குர் ஷர்மா என்ற ட்விட்டர்வாசி ஒருவர், பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் மீது ட்விட்டர் வாயிலாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில் "11 இன்ச் ஆப்பிள் ஐ-பேடு ப்ரோ ஒருபோதும் 1 லட்சத்து 76 ஆயிரத்து 900 ரூபாயாக (ரூ.1,76,900) இருந்ததில்லை. அவர்கள் மீது தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த புகாரில் நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்குப் பதிலாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை டேக் செய்துள்ளார்.
இந்த பதிவை கண்டதும் அவருக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம், "நாங்கள் உதவ விரும்புகிறோம். ஆனால்,தற்போது நாங்கள் இந்தியாவிற்கு மலிவு விலையில் விமானப் பயணத்தை வழங்குவதில் பிசியாக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டு பதிலளித்துள்ளது. இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!