Viral
பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பு.. இணையத்தில் வைரலாகி வரும் பகீர் வீடியோ!
மனிதர்கள் காதில் எறும்பு புகுந்துவிட்டது என்றும் சில பூச்சிகள் சென்று விட்டது என்று நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் காதில் பாம்பு ஒன்று புகுந்துவிட்டது என்று நாம் இதுவரை கேள்விப் பட்டிருக்கிறோமா?. ஆனால் அப்படியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஒரு பெண்ணின் காதில் பாம்பு ஒன்று புகுந்து, அதை மருத்துவர்கள் வெளியே எடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்று இதுவரை தெரியவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட பெண் யார் என்றும் தெரியவில்லை.
அந்த வீடியோவில், அந்த பெண்ணின் காதில் மஞ்சல் நிறத்தில் பாம்பு தலை ஒன்று காதின் வெளியே எட்டிப்பார்க்கிறது. இதை மருத்துவர் ஒருவர் பாம்பை வெளியே எடுக்க முயல்வதுபோன்ற காட்சி பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ 3 நிமிடம் 49 வினாடிகள் கொண்டதாக உள்ளது. இதை ஷில்பா ராய் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஆனால் இந்த வீடியோ உண்மையானதா என்பது இதுவரை தெரியவில்லை.
இருப்பினும் இந்த வீடியோவை பலர் பார்த்து அதிர்ச்சியடைந்து தங்களது சமூகவலைதளங்களில் பகிர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் அந்த பெண்ணை கிண்டல் செய்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!