Viral
Cyber Crime மோசடி.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட Parithabangal youtube சேனல்!
தொழில்நுட்பங்கள் வளருவதற்கு ஏற்ப மோசடி பேர்வழிகளும் தங்களை மேம்படுத்திக் கொண்டு பொதுமக்களை ஏமாற்றி நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.
முதலில் வங்கியில் இருந்து பேசுவதுபோல ஆதார் கார்டு, பான் கார்டு எண்ணைப் பெற்று பணத்தைத் திருடி வந்தனர். பிறகு எஸ்.எம்.எஸ் மூலம் உங்களுக்கு கிப்ட் கிடைத்துள்ளது. இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் என கூறி பணங்களை அபேஸ் செய்தனர்.
தற்போது வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி மர்ம நபர்கள் பொதுமக்களின் ஆசைகளை முதலீடாக கொண்டு தங்கள் வேலையை காட்டி வருகின்றனர். இவர்களிடம் சாமானிய மக்கள் முதல் நடிகர்கள், எஸ்.பி.எஸ் அதிகாரிகள் என பலரும் ஏமாந்து உள்ளனர்.
இந்த Cyber குற்றங்கள் குறித்து போலிஸார் தொடர்ச்சியாகப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் கவனத்துடன் இல்லாததால் இப்படியான Cyber குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு Cyber Crime போலிஸாருடன் இணைந்து Parithabangal youtube சேனல் தங்களுக்கே உண்டான பாணியில் ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில் இணையதள கடன் செயலிகள், பெண்களின் புகைப்படங்களை வாட்ஸ் ஆபில் அனுப்பி ஏமாற்றுவது, பெண்களுடன் பேசுவதற்குக் கட்டணம் வசூலிப்பது, OLX மோசடி உள்ளிட்ட Cyber Crime குற்றங்களை கோபி மற்றும் சுதாகர் குழுவினர் தங்கள் நடிப்பின் மூலம் நகைச்சுவையாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!