Viral
இனி மாதவிடாய் எப்போது வரும் என்பதை அறியலாம்.. பெண்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்!
வாட்ஸ்அப் நிறுவனம் சிரோனா ஹைஜீன் என்ற நிறுவனத்துடன் இணைந்து பெண்களுக்காக புதிய வசதி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த வசதியின்படி பெண்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 9718866644 என்ற எண்ணில் உள்ள சிரோனா நிறுவனத்தின் வாட்ஸ்அப் வணிகக் கணக்கிற்கு முதல் 'ஹாய்' என மெசேஜ் அனுப்பவேண்டும்.
பின்னர், பயனர்கள் தங்கள் மாதவிடாய் காலங்கள் மற்றும் அவற்றின் கடைசியாக மாத விடாய் எப்போது வந்தது போன்ற கால விவரங்களை வாட்ஸ்அப் சாட் பாக்ஸில் தெரிவிக்கவேண்டும். மேலும் சிரோனா நிறுவனம் கேட்கும் சில கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.
அந்த விவரங்களை கொடுத்தபின், உங்களின் அடுத்த மாதவிடாய் எப்போது ஏற்படும், கருமுட்டை உருவாக்கம், கருவுறுவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கும் நாட்கள், அடுத்த மாதவிடாய் காலம் உள்ளிட்ட தகவல்கள் அளிக்கப்படும்.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு சமூகவலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தொடர்ந்து எழுந்து வருகிறது. இதில் பதிவிடும் பயனர்கள் இதன் நன்மை மற்றும் தீமை குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!