Viral
மாணவியின் ஆபாச படத்தை Whatsapp Status-ல் வைத்த ஆசிரியர் - போக்சோ சட்டத்தில் ‘காப்பு’ மாட்டிய காவல்துறை !
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சவுதத்தி தாலுகா எக்குந்தி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மகேஷ் சிவலிங்கப்பா பிரதாரா (வயது 44) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார்.
இவர் பள்ளியில் படித்து வந்த ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததுடன், அந்த மாணவியை அவர் ஆபாசமாக படங்களும் செல்போனில் எடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு, வேறொருவருடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இதை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் மகேஷ், தனது செல்போன் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் மாணவியின் ஆபாச படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் மாணவியின் திருமணம் தடைப்பட்டு போனது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினரும், கிராம மக்களும் நேற்று பள்ளிக்கு சென்று ஆசிரியர் மகேசை பிடித்த சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பின்னர் அவரை எமகுந்தி போலிஸில் ஒப்படைத்தனர். அவரை போலிஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!