Viral
16 வருடங்களுக்கு பிறகு பிறந்த சிம்பன்சி.. முதல் பிறந்த நாளைக் கொண்டாடிய ‘ஆதித்தியா’ ! (புகைப்படங்கள்)
வண்டலூர் உயிரியல் பூங்காக்களில் சிம்பன்சி குட்டியான ஆதித்யா முதல் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதுதொடர்பாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும், இதில் 178 வகையான 2300 வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
09.06.2022 அன்று, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து 01.10.2005 அன்று கொண்டுவரப்ட் 29 வயதான கொம்பி மற்றும் 24 வயது கௌரி (சூசி) ஆகியவற்றிக்கு 16 வருடங்களுக்கு பிறகு பிறந்த சிம்பன்சி குட்டியான 'ஆதித்தியா'வின்' முதல் பிறந்த நாளைக் கொண்டாட்டியது.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுடன் சேர்ந்து சிம்பன்சி குட்டியின் முதல் பிறந்த நாள் உயிரியல் பூங்கா பார்வையாளர்களின் முன்னிலையில் துணை இயக்குநர் டாக்டர். ஆர். காஞ்சனா, இ.வ.ப., அவர்களின் தலைமையில் கொன்டாடினர்.
பூங்கா விலங்குகளுக்கு தேவையான கோடை செறிவூட்டல்களை வழங்கி வருகிறது. பிறந்த நாள் விருந்தின் ஒரு பகுதியாக, சிம்பன்சிகளுக்கு மிகவும் பிடித்தமான "உறையை வைத்த பழ கேக்" வழங்கப்பட்டது.
உயிரியல் பூங்கா சமீபத்தில் பார்வையாளர்களால் கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் பெட் பாட்டில்களுக்கும், உணவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்கப்படும் குடிநீருக்கும் ஸ்டிக்கர் முறையை அறிமுகப்படுத்யுள்ளது.
உயிரியல் பூங்காவில் பிளாஸ்டிக் மேலாண்மையைப் பொறுத்தவரை இந்த அமைப்பு நல்ல வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது. அதன் செயல்பட்டின் முதல் நான்கு நாட்களில், 77% பாட்டில் பார்வையாளர்களால் திருப்பி கொடுக்கப்பட்டது, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பூங்காவிற்குள் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் சிற்றுண்டி பொருட்கள் உட்பட ஒருமுறை பயன்பத்தப்பட்ட பிளாஸ்டிக்குகளை கொண்டு வருவதை தவிர்க்குமாறு உயிரியல் பூங்கா கேட்டுக்கொள்கிறது. பார்வையாளர்கள் தங்கள் சொந்த பிளாஸ்டிக் அல்லாத தண்ணீர் பாட்டில்களை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!