Viral
நண்பர்கள் பேச்சைக் கேட்டு வயாகரா எடுத்துக்கொண்ட புதுமாப்பிள்ளை.. உடலுறவின்போது ஏற்பட்ட விபரீதம்!
உத்தர பிரதேசம் மாநிலம் பிரயக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் விமல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருமணம் நடந்துள்ளது. இதனிடையே, இவருக்கு தாம்பத்ய குறைபாடு இருந்துள்ளதால், நண்பர்கள் சிலரின் அறிவுறுத்தலின் படி, வயாக்ரா மாத்திரையை எடுத்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மாத்திரை பலன் அளிப்பதாக நம்பி, அடிக்கடியும் அளவுக்கு அதிகமான அளவுக்கும் எடுத்துக்கொண்டுள்ளார். இதனிடையே சில நாட்களிலேயே விமலுக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டது. மேலும் விமலின் பிறப்புறுப்பில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது பிறப்புறுப்பு தொடர்ச்சியான விரைப்பு ஏற்பட்டதன் காரணமாக விமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் பிறப்புறுப்பில், அறுவை சிகிச்சை செய்து வலியை குறைத்தனர்.
ஆனாலும் விமலின் விரைப்புத்தன்மையை குறைக்க முடியாது எனக் கூறிவிட்டார்கள். வாழ்நாள் முழுக்க இனி பிறப்புறுப்பு இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். மேலும் விரைப்புத் தன்மையை மறைக்க இறுக்கமான உள்ளாடையை அணிந்துகொள்ளவேண்டும்.
அதேவேளையில், குழந்தைகள் பெற்றுக்கொண்டு வழக்கமான வாழ்க்கையை தொடர்முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். நண்பர்களின் பேச்சைக் கேட்டு புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !
-
“பழனிசாமியிடம் துரோகத்தை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளாசல் !
-
தென்காசியில் 2.44 லட்சம் பயனாளிகளுக்கு உதவிகள் – முதலமைச்சர் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் என்னென்ன?
-
சொந்தமாக வீடு… கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பெரும் சாதனை - 1 இலட்சமாவது பயனாளிக்கு சாவி வழங்கிய முதல்வர்!