Viral
இந்த காரை வாங்கணும்னா 20 மாசம் காத்திருகணும்? - தாமதத்திற்கான காரணம் என்ன?
உலகெங்கிலும் ஆட்டோமொபைல் துறை தற்போது சிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலான வாகன தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை பாதித்துள்ளது. மேலும் மந்தமான உற்பத்தி மற்றும் பிரபலமான கார்களின் சிலவற்றின் அதிக தேவை காரணமாக, காத்திருப்பு காலம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அந்த வகையில் கேரன்ஸ், XUV700 ஆகிய கார்களை புக்செய்தால் 20 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதிக காத்திருப்பு காலம் கொண்ட வாகனங்களின் பட்டியல்கள் இதோ.
4 மாதங்கள் வரை காத்திருக்கும் கார்கள்!
இந்தியாவின் மிகவும் திறன் வாய்ந்த கார்களில் ஒன்றான ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மெதுவாக குறைந்து வரும் சி-பிரிவு செடான் பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதன் வலுவான பேக்கேஜிங் காரணமாக, 4 மாத காத்திருப்பிற்கு பிறகு விற்பனையாகிறது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான மாருதி பலேனோ (Maruti Baleno) ,நல்ல எரிபொருள் திறன் காரணமாக ஏராளமான வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கிறது.இதுவும் 4 மாத காத்திருப்பிற்கு பிறகு விற்பனையாகிறது.
6 மாதங்கள் வரை காத்திருக்கும் கார்கள்
அதிக அம்சம் வாய்ந்த வாகனங்களில் காம்பாக்ட் SUV ஸ்பேஸில் MG ஆஸ்டர் உள்ளது. இது மற்ற கார்களுடனான போட்டியை விட பாதுகாப்பான மின்னணு இயக்கி உதவி அமைப்புகளை வழங்குகிறது. இதனால் டீலர்ஷிப்பைப் பொறுத்து, காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரை செல்லலாம்.
தொடக்கத்திலிருந்தே ஹூண்டாய்க்கான விற்பனை அட்டவணையில் எப்போதும் ஒரு பிரீயமாக இருந்து வரும் க்ரெட்டா (creata) அதிக விற்பனைக் காரணமாக 6 மாத காத்திருப்பிற்கு பிறகு விற்பனையாகிறது. கியா சோனெட் ( sonet), , ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ( city Hybrid) அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆனாலும் டீலர்ஷிப்பை பொறுத்து சுமார் 6 மாதங்களுக்கு பிறகு விற்பனையாகிறது.
12 மாதங்கள் வரை காத்திருக்கும் கார்கள்!
புதிய லைஃப்ஸ்டைல் ஆஃப்-ரோடர் தோற்றத்துடன் காணப்படும் மஹிந்திரா நிறுவனத்தின் தார் ( Thar) இந்த பட்டியலில் முதலில் உள்ளது. இதன் காத்திருப்பு காலம் 11 மாதங்கள் வரை செல்லலாம்.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் MPV வகை மாருதி எர்டிகா ( Ertiga),சுமார் ஏழு பேர் உட்காரக்கூடிய வசதியுடன் தயாரிக்கப்பட்டதால் , இந்தியர்கள் அதிக அளவில் இந்த காரை வாங்குகின்றனர்.இதன் காத்திருப்பு காலமும் 10 மாதங்கள் வரை ஆகும்.
20 மாதங்கள் வரை காத்திருக்கும் கார்கள்
மிகவும் கவர்ச்சிகரமான அறிமுக விலையில் ரூ.8.99 லட்சத்தில் தொடங்கப்பட்டது கியா கேரன்ஸ் (Kia Carens).பிரீமியம் மற்றும் பிரெஸ்டீஜ் போன்ற பெட்ரோலில் இயங்குவதால் காத்திருப்பு காலம் ஒன்றரை வருடத்தை விட சற்று அதிகம்.
பல நவீன அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின்களுடன் கூடிய மஹிந்திரா XUV700, இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமானது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் டீலர்ஷிப்பைப் பொறுத்து, அதன் காத்திருப்பு காலம் 4 மாதங்கள் முதல் 20 மாதங்கள் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“பருவமழையை எதிர்கொள்ள ஒருங்கிணைவோம்!” : ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் தெரிவித்தது என்ன?
-
”நிச்சயம் வெள்ள பாதிப்பு இருக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
-
”தடைகளை உடைத்து மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும் முதலமைச்சர்” : அமைச்சர் கோ.வி.செழியன் பேச்சு!
-
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் அடுத்த நடவடிக்கை! : 2 புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு!
-
புதிய உச்சத்தை அடைந்துள்ளது ஆவின் பால் உப பொருட்கள் : பெருமையுன் சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்!