Viral
உடல் எடையை குறைக்கும் அற்புத கனி எது தெரியுமா? - சீக்ரெட்ஸ் உடைக்கும் இளம் மருத்துவர்!
மருத்துவமனை அல்லது வீடுகளில் இருக்கும் நோயாளிகளை காணச் செல்லும் பெரும்பாலான உறவினர்கள், பார்வையாளர்கள் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை வாங்கிச் செல்வதே வழக்கம்.
ஆனால் ஆப்பிள், ஆரஞ்சு பழங்களுக்கு பதிலாக கொய்யாப்பழம் வாங்கி கொடுப்பது மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஏனெனில், 100 கிராம் ஆப்பிளில் 15 கிராம் மாவுச்சத்தும், 0.3 கிராம் புரதமும் உள்ளது. ஆனால், அதே 100 கிராம் கொய்யாவில் 13 கிராம் மாவுச்சத்தும், 2.5 கிராம் புரதம் உள்ளது.
மேலும், ஆப்பிளில் விட்டமின் C - 7% = 4.5 IU விட்டமின் A - 1% = 54 IU உள்ளது. இதுவே, கொய்யாவில் விட்டமின் C - 380% = 228.3mg விட்டமின் A - 12% = 624 mg உள்ளது.
இப்படியாக தாதுக்கள், விட்டமின்களின் அளவுகளை கணக்கில் கொண்டாலே கொய்யா ஆப்பிளை விட சிறந்த கனியாக கருதப்படும்.
இதுபோக, கொய்யாப்பழத்தில் ரத்த சர்க்கரையை ஏற்றும் அளவான Glyceminc Index வெறும் 32%. ஆப்பிள், ஆரஞ்சு, மா, வாழை, போன்ற பல பழங்களை ஒப்பிடுகையில் இது மிகக்குறைவு. இதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு அதிக அளவில் தூண்டப்படாது. உடல் எடையும் கூடாது.
உடல் எடையை குறைக்க முற்படுவோர் நாள்தோறும் ஒரு கொய்யாப்பழத்தை உட்கொண்டால் சிறந்த பலனை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!