Viral

YouTubeல் அப்லோட் செய்யப்பட்ட முதல் வீடியோ எது தெரியுமா?

இணையம் அதன் ஆரம்ப நிலையில் இருந்து வெகுதூரம் முன்னேறி வந்திருக்கிறது. இந்த மாற்றத்தை வேறு எந்த அம்சங்களை விட வீடியோவில் பளிச்சென உணரலாம். குறிப்பாக இன்றைய டிஜிட்டல் உலகில் அனைவரும் சமூக வலைதளமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

இதில் பலரும் இத்தனை லாபம் பாக்கும் ஒரு துறையாக மாற்றி வருகின்றனர். இது ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி, யூடியூப் பயன்படுத்தும் பலர் தற்போது யூடியூபர் என்பதையே முழுநேர வேலையாக செய்துவருகின்றனர். இன்றைய நிலைமையில் அனைவருக்கும் சொந்த வீடு இருக்கிறதோ இல்லையோ, சொந்தமான யூடியூப் சேனல் ஒன்று இருக்கிறது.

இதில் அவர்களின் அன்றாட வாழ்க்கையை vlog என்ற பெயரில் காலையில் எழுவது முதல் இரவு தூங்கும் வரை உள்ள நிகழ்வுகளை பதிவிட்டு மில்லியன் லைக்ஸ்களை பெறுகின்றனர். இதில் ஒருவர் பதிவிடும் வீடியோவை பார்வையாளர்கள் பார்க்கும் எண்ணிக்கையை பொருத்து அவர்களுக்கு பணம் குவிந்து வருகிறது. இந்த யூடியூபர்ஸுக்கு vlog என்ற விதையை தூவியது கரீம் என்ற யூடியூபரே.

2005-ல் யூடியூப் இணையதளம் அறிமுகமானது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜாவேட் கரீம் என்ற இளைஞர் வெளியிட்ட வீடியோவே யூடியூபில் அப்லோட் செய்யப்பட்ட முதல் வீடியோ என்ற பெருமையை பெற்றுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில், ‘Me at the zoo’ என்ற பெயரில் யானை கூட்டத்தின் முன் நின்றுக்கொண்டு, அங்குள்ள யானைகளை பற்றி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் கரீம்.

இந்த வீடியோ மே 2005 இல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. அதன்பிறகு தனது படிப்பை தொடர்வேண்டும் என யூடியூப்பில் இருந்து கரீம் வெளியேறியுள்ளார். அதன்பிறகு 2006ம் ஆண்டு கூகுள் யூடியூப்பை வாங்கிய பிறகு, கரீம் யூடியூப் பக்கத்திற்கு தனது வீடியோவிற்காக சுமார் 137,443 மில்லியன் மதிப்புள்ள பங்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சினிமாவையை மிஞ்சும் கொலை... 4 ஆண்டு காத்திருந்து பழி தீர்ப்பு: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!