Viral
மோடி இதுவரை எந்த நாட்டுக்குச் சென்றதில்லை? - சமூக வலைதளங்களில் வைரலாகும் டி.வி நிகழ்ச்சி கேள்வி!
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்தே இந்தியாவில் இருந்ததை விட வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதே அதிகம் என எப்போதும் விமர்சிக்கப்படுவதுண்டு.
ஆனால், பா.ஜ.கவினரும் அவரது அமைச்சரவை சகாக்களும், இந்தியாவின் நலனுக்காகவே பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் என கூறுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் பொருளாதார நிலையோ அதலபாதாளத்தில் கிடப்பது கண்கூடாகத் தெரிகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தின் போது புல்வாமா தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தபோதும், நாட்டின் நிலைமையை கூட கருத்தில் கொள்ளாமல் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள புறப்பட்டுவிட்டார் என மோடி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
அதைப்போல, இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகும் ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரையில் பிரான்ஸ், பூட்டான், பஹ்ரைன், ரஷ்யா, அமெரிக்கா, சவுதி அரேபியா, தாய்லாந்து, பிரேசில், ஐக்கிய அரபு நாடுகள் என 9 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் நவம்பர் 2019ம் ஆண்டு வரை இவற்றில் எந்த நாட்டிற்கு நரேந்திர மோடி இந்திய பிரதமராக பயணம் செய்ததில்லை எனக் கேள்வி எழுப்பி கிரிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், மொசாம்பீக், பொலீவியா ஆகிய நான்கில் சரியான விடையை தேர்வு செய்யுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனைக் கண்ட பார்வையாளர்கள் பலர் எது சரியான விடை எனத் தெரியாமல் திணறினர்.
ஆனால் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து இதுவரை பொலீவியா நாட்டுக்கு மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில்லை என்பதே அதற்கான பதில்.
மேலும், உலக நாடுகள் அனைத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி பொலீவியாவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் பிரதமராக சென்றதில்லை எனவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!