Viral
''தங்கம் விலைக்கு தக்காளி விக்குதுன்னு பேச்சுக்கு சொல்வாங்க'' : அதுக்குன்னு இப்படியா!
பருவம் தவறி பெய்த மழையால் பாகிஸ்தானில் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தக்காளி பற்றாக்குறையின் காரணமாக அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் தற்போது தக்காளியின் கிலோ 320 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அதனால், அரசு மீது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவிவருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த ஈரான் நாட்டில் இருந்து தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை இறக்குமதி செய்து வருகிறது. பாகிஸ்தானில் தக்காளியைப் பாதுகாப்பதற்காக விவசாயிகள் காவலர்களை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்துக்கு கை, கழுத்து, தலை என அத்தனை இடங்களிலும் தங்கத்திற்கு பதில் தக்காளியை ஆபரணங்களாக அணிந்து இருந்தார். மேலும், அவருடைய பெற்றோர் திருமணத்துக்கு பரிசாக மூன்று கூடை தக்காளியை பரிசளித்துள்ளனர்.
இதுகுறித்து மணப்பெண் கூறுகையில் , தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது. அதேபோல் தற்போது, தக்காளியின் விலையும் அதிகமாக உள்ளது. அதனால்தான் தங்கத்திற்கு பதிலாக தக்காளியை அணிந்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
இதனை உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று செய்தியாக்கியது. அதனையடுத்து, இந்த நிகழ்வு உலகளவில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !