Viral
ட்விட்டரில் கலக்கும் விஜய் ரசிகர்கள் : இந்திய அளவில் ட்ரெண்டாகும் #SaveTheniFromNEUTRINO
சமூக பிரச்னைகள் மீது கவனம் செலுத்தி ஹேஷ்டேக் பயன்படுத்துங்கள் என நடிகர் விஜய் அறிவுறுத்தியதன்படி விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படத்தின் பாடல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், சுபஸ்ரீ இறப்பு உள்ளிட்ட சமூக பிரச்னைகள் மீது கவனம் செலுத்தி ஹேஷ்டேக் பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தினார்.
மேலும், சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதனையடுத்து அடுத்தநாளே விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #JusticeForSubaShree ஹேஸ்டேக்கை பயன்படுத்தி சுபஸ்ரீக்கு நியாயம் வேண்டும் என கோரிக்கை வைத்து ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர்.
அதன் தொடர்ச்சியாக #justiceforsubasree என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். பின்னர், #keezhadiதமிழ்civilization என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.
தற்போது தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. அந்தத் திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் ரசிகர்கள் தேனியில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் நான்காவது இடத்திலும், தமிழ்நாடு அளவில் முதலிடத்திலும் உள்ளது.
Also Read
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!