Viral
வைரஸ் அபாயம்: இந்த பிரபல செயலி உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இருந்தால் உடனடியாக நீக்குங்கள்!
பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக கேம் ஸ்கேனர் – camscanner என்ற செயலியை கூகுல் ப்ளே ஸ்டோரிலிந்து நீக்கியுள்ளது கூகுள். மேலும் அதனை மொபைலில் இருந்து நீக்கவும் பயன்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழில் நுட்பத்தின் தற்போதைய வடிவம் மக்கள் கைகளுக்கு அடங்கும் வண்ணம் உள்ளது. அதனால், பெரும்பாலனோர் மொபைல் பயன்பாட்டின் மூலம் அனைத்து தகவல்களையும் பதிவிறக்கம் செய்யவோ, பகிறவோ செய்கின்றனர். சமீப காலமாக இந்த தகவல்கள் அனைத்தையும் சில போலி செயலிகள் மூலம் திருடப்படுவதாகவும், வைரஸ் தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளிவந்தது.
இதுபோல குறைபாடுகள் உள்ள செயலிகளைக் கண்டறிந்து அவற்றை கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கும் முடிவினை கூகுள் மேற்கொண்டது. அந்த வரிசையில் தரவுகள் மற்றும் கோப்புகளை மொபைல் மூலம் ஸ்கேன் செய்து PDF - ஆக மாற்றும் கேம் ஸ்கேனர் (Cam Scanner) என்ற செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது கூகுள்.
பிரபலமான இந்த செயலியை உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் தரவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியில் ஸ்கேன் செய்யப்படும் புகைபடத்தை எளிதில் பிடிஎஃப் கோப்பாக மாற்றலாம். இந்த செயலியின் புதிய அப்டேட்டில் தற்போது விளம்பர மால்வேர் வைரஸ் ஒன்று இருப்பதாக கேஸ்பெர்ஸ்கீ ஆண்டி வைரஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இந்த மால்வேர், பயனாளர்களுக்கு ஆபாச விளம்பரங்களை காண்பிக்கும் என்றும், பயனாளரின் அனுமதியின்றி சந்தாதாரராக்குகிறது என்றும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கூகுள் நிறுவனம் கேம் ஸ்கேனர் செயலியை நீக்கியுள்ளது. இந்த வைரஸ் பிரச்சனை ஆண்ட்ராய்டு வகைகளில் மட்டுமே உள்ளது. மற்ற ஓ.எஸ்-களில் வழக்கம் போல் செயல்படும் எனவும் கூறியுள்ளனர்.
இதுபோல இன்னும் பல செயலிகள் இயங்கி வருவதாகவும் அவைகளை கூகுள் நிறுவனம் கண்டறிந்து நீக்குவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
Also Read
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!
-
உலக புராதன சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டை : யுனெஸ்கோ அறிவிப்பு!
-
குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி!
-
“நடப்பாண்டில் 10 ஆயிரம் பேருக்கு அரசுப்பணி நியமனம்!” : TNPSC தலைவர் பிரபாகர் பேட்டி!