Viral
“புல்லாங்குழல் இசை கேட்டால் மாடுகள் அதிகமாகப் பால் கொடுக்கும்” : பா.ஜ.க எம்.எல்.ஏ போட்ட புது குண்டு !
பா.ஜ.க ஆட்சியில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் விளம்பரத்திற்காகத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சை பேச்சுகள் பேசி வருகிறார்கள். மேலும் பல முறை அறிவியலுக்குத் துளியும் சம்பந்தம் இல்லாத வகையில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சை ஏற்படுத்தி வருகின்றனர்.
முன்னதாக பிரதமர் மோடி, தேவலோகத்தில் நம் முன்னோர்கள் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் விமான சேவையை பயன்படுத்தினார்கள். அதைக் கண்டுபிடித்ததே அவர்கள்தான் என்று பேசி இருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி கடந்த வாரம் பேசிய பா.ஜ.க மத்திய கல்வித் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்னரே நமது வேத எழுத்துக்களில் புவி ஈர்ப்பு விசை குறித்து எழுதப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில், அசாம் மாநில சில்சார் தொகுதி பாஜக எம்.எல்.ஏ திலீப் குமார்பால் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார். இவர் கடந்த ஞாயிறன்று சில்சாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர்,“பகவான் கிருஷ்ணர் இசைக்கும் தனித்துவமான புல்லாங்குழல் இசையைப்போல இசைத்தால் அதை காதால் கேட்கும் பசுக்கள் வழக்கத்தைவிட கூடுதலாகப் பால் கறக்கும்.
அந்த இசையில் அவ்வளவு சிறப்பு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். இதைத் தானாக சொல்லவில்லை நவீன விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றும் அள்ளி விட்டுள்ளார்.
மேலும், ‘நான் விஞ்ஞானி அல்ல’ என்றும் தன்னடக்கத்துடன் கூறிக்கொண்டுள்ள அவர், இந்திய கலாச்சாரத்தில் உள்ள ‘வாஸ்து அறிவியலை’ விஞ்ஞானிகளும் தற்போது ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த பேச்சு விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இதற்கு விளக்கமளித்துப் பேசிய அவர், “இந்த கருத்துத் தனது தனிப்பட்ட கருத்து அல்ல எனவும், குஜராத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு இதுகுறித்து ஆராய்ந்து வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையிலேயே தான் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், பகவான் கிருஷ்ணர் புல்லாங்குழல் இசையென்பது வெறும் பொழுதுபோக்குக்காக அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!