Viral
வெள்ளத்தில் சிக்கிய 47 ஆடுகளைக் காப்பாற்றிய 5 நாய்கள் : கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் !
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பதாகவும், 60க்கும் மேற்பட்டோர்கள் காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கேரள மக்கள் படும் வேதனைகளை அறிந்து அம்மக்களுக்கு அண்டை மாநிலத்தில் உள்ள பலர் உதவிகள் செய்து வருகிறார்கள். குறிப்பாக கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து தங்களால் முடிந்த உதவிகளையும் மற்ற மாநில மக்கள் செய்து வருகின்றனர். மனிதர்கள் மட்டுமின்றி மனிதர்களால் வளர்க்கப்பட்ட செல்லப் பிராணியும் மக்களுக்கு உதவி செய்த சம்பவம் பெரும் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலப்புரம், வயநாடு ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் முழ்கியதால் அப்பகுதியில் இருந்த மக்களை மீட்டு முகாம்களில் தங்கவைத்தனர். பழங்குடியினர் வசிக்கும் நெடுங்காயம் பகுதியில் ஜானகி அம்மாள் என்கிற வயதான பெண்மணி வெள்ளத்தில் தத்தளித்தார். அங்கு வந்த பாதுகாப்பு படையினர் ஜானகி அம்மாளை மீட்டனர்.
அப்போது எங்கள் வீட்டில் ஆடு, நாய்கள் உள்ளது, அதனைக் காப்பாற்றுங்கள் என பாதுகாப்புப் படையினரிடம் முறையிட்டுள்ளார். தற்போது குறைவான ஆட்கள் செல்லும் படகு மட்டுமே கைவசம் இருப்பதால், அடுத்து வரும்போது விலங்குகளை மீட்பதாக பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர்.
அங்கிருந்து போகும் போது ஆடுகள் தங்கி இருந்த மந்தைகளை திறந்து விட்டுச் சென்றனர். வெள்ளம் அதிகமானதால் பாதுகாப்பு படையினாரால் மீண்டும் அப்பகுதிக்கு செல்ல முடியாமல் போனது. இதனால் மிகுந்த கவலையில் இருந்த ஜானகி அம்மாள் ஐந்து நாட்களுக்குப் பிறகு முகாமில் இருந்து வீட்டிற்குச் சென்றார்.
அப்போது அங்கு அவர் வளர்த்த 5 நாய்கள், வெள்ளத்தில் சிக்கிய 47ஆடுகளையும், கோழி குஞ்சுகளையும் கரை ஒதுக்கி காப்பாற்றி பாதுகாத்து வந்ததைக் கண்டு, ஜானகி அம்மாள் நெகிழ்ந்து போனார். பின்னர் பட்டினியாக இருந்த விலங்குகளுக்கு உணவு அளித்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பாராட்டைப் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி நிலச்சரிவினால் சிக்கியவர்கள் பலரை அந்த பகுதியில் உள்ள நாய்கள் அடையாளம் கண்டுபிடிக்க உதவியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ‘நாய் நன்றி உள்ள விலங்கு’ என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல என்பது இந்த சம்பவத்தின் மூலம் மீண்டும் உண்மையாகி உள்ளது.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!