Viral
பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் சொதப்பிய மோடி- வைத்து செய்யும் நெட்டிசன்கள்.. கவலையில் தமிழக பா.ஜ.க.,வினர் !
டிஸ்கவரி சேனலின் பிரபலமான தொடரான Man Vs Wildல் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் இந்நிகழ்ச்சியில் அவர் காட்டில் சாகசம் செய்வார் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான செய்தி இணையதளத்தில் வைரல் ஆனது.
இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு குறித்த முன்னோட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. காட்டில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி காட்டிய பியர் க்ரில்ஸோடு, மோடி காட்டிற்குள் வலம் வருவதுபோன்று காண்பிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா இதே போன்று காட்டுக்குச் சென்று சாகசம் செய்தது பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஒளிபரப்பப்பட்ட Man Vs Wild நிகழ்ச்சியை பலர் பார்த்தனர். பியர் க்ரில்ஸ் ரசிகர்கள் பலர் அவருடைய வழக்கமான சாகச பயணம் போல் இல்லாமல் எந்த விசேடமும் இல்லாமல் இருந்தது என்றும், பள்ளி மாணவனை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர் போன்று இருந்தது என்றும் விமர்சனம் செய்துள்ளனர். இது மட்டுமல்லாமல் பலர் இந்த ஷோவை கிண்டல் செய்து ட்விட்டரில் மீம்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.
நிகழ்ச்சியில் பியர் க்ரில்ஸ் மோடியுடன் ஆங்கிலத்தில் பேசுகிறார். பிரதமர் மோடி கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாமல் இந்தியில் பேசுகிறார். அவரது இந்தியை கேட்டு ஒன்றும் புரியாமல், பியர் க்ரில்ஸ் ஆங்கிலத்தில் ஏதோ பேசுகிறார். இதைக்கண்டு கடுப்பானவர்கள் ட்விட்டரில் மீம்ஸ்களை தெறிக்கவிடத் தொடங்கியுள்ளனர். #ManvsModi என்ற பெயரில் மீம்கள் வைரலாகி வருகின்றன.
சாதாரணமாகவே பா.ஜ.க, மோடி குறித்து மீம்கள் உருவாக்குவதில் தமிழர்களும், மலையாளிகளும் கில்லாடிகள். விரைவில் இந்த நிகழ்ச்சி தமிழிலும் வெளியாக உள்ள நிலையில், மோடியை வைத்து தமிழ்நாட்டிலும் வைத்து செய்வார்களோ என்று தமிழக பா.ஜ.க.,வினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?