Viral
கீழடியில் பழந்தமிழர் பயன்படுத்திய உறை கிணறு : வியந்த தொல்லியல் ஆய்வாளர்கள்!
மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 4 கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்து 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் பத்து அடியில் குழிகள் பறித்து தொல்லியல் துறை ஆய்வுகளை நடத்தி வருகிறது.
அதில் தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொள்ளும்போது உறை கிணறு கண்டறியப்பட்டது. 40 செ.மீ சுற்றளவு, 50 செ.மீ உயரம் கொண்ட நான்கு உறைகள் கொண்ட அடுக்காக அந்த உறை கிணறு அமைந்துள்ளது.
இதற்கு முன்னதாக இங்கு நீளமான இரட்டைச் சுவர், பல்வேறு வடிவிலான பானைகள், வட்டவடிவிலான பெரிய தாழி உள்ளிட்டவை கிடைத்தள்ளன. மேலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கீழடியில் அகழாய்வுப் பணி தொடங்கியல் இருந்து அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் கீழடி ஆய்வுப் பணிகளை பார்வையிட்டுச் செல்வார்கள். அதேபோல பார்வையிடச் சென்றவர்கள் பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தாழியைக் கண்டு வியந்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், மதுரை மக்களவை தொகுதி எம்.பி., சு.வெங்கடேசன் இதுகுறித்து பல்வேறு தகவல்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். நாளிதழ்களில் அதுகுறித்த செய்திகளைப் பார்த்தும் மக்கள் இங்கு கூடுவதாகக் கூறப்படுகிறது.
Also Read
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!