Viral
“மெள்ள... மெள்ள... ஏன்னா, குப்பைக்கு வலிக்கும் பாருங்க” : பா.ஜ.க எம்.பி-யின் ஸ்வச் பாரத் அட்ராசிட்டி!
சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தும் வகையில் பா.ஜ.க அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்வச் பாரத்’ எனும் தூய்மை இந்தியா திட்டம் பா.ஜ.க-வினரிடம் சிக்கிக்கொண்டு படாத பாடு படுகிறது. குப்பை இல்லாத இடத்திலேயே வெறுமனே பெருக்கிக் கொண்டிருப்பது; குப்பையை வேறெங்காவது அள்ளிக்கொண்டுவந்து போட்டுப் பெருக்குவதெல்லாம் நாம் ஏற்கனவே பா.ஜ.க-வினரிடம் பார்த்ததுதான்.
இந்நிலையில், இன்று ஒரு ‘ஸ்வச் பாரத்’ சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று பாராளுமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் மத்திய இணை நிதி அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் மதுரா தொகுதி பா.ஜ.க எம்.பி., ஹேமமாலினி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
இந்தப் பணியில் ஈடுபட்ட பெரும்பாலானோர் தரையைக் கூட்டிப் பெருக்கி தூய்மைப்படுத்தியபோது, ‘குரூப்புல டூப்’ ஆக பெருக்குவது போல பாவ்லா செய்துகொண்டிருந்தார் முன்னாள் நடிகையும், எம்.பி-யுமான ஹேமமாலினி.
இதுவரை வீட்டு வேலைகளைச் செய்தறியாத பாலிவுட் திரையுலகின் முன்னாள் கனவுக்கன்னியான ஹேமமாலினி, துடைப்பத்தை தரையில் படாமலேயே பெருக்கிக் கொண்டிருந்ததை சமூக வலைதளவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.
“அவர் தரையைப் பெருக்கவில்லை; துடுப்பு போட்டு படகு ஓட்டிக்கொண்டிருக்கிறார்” என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். ஹேமமாலினியின் இந்த ‘ஸ்வச் பாரத்’ சேவைதான் சமூக வலைதளங்களில் இன்றைய டாப் வைரல்.
Also Read
-
நெல் கொள்முதல் விவகாரம்: அவதூறு பரப்பிய பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் Data-வுடன் பதிலடி.. - விவரம் உள்ளே!
-
போலி விவசாயி... பொய் மூட்டை வியாபாரம்... - அவதூறு பரப்பிய பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி!
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!