Viral
அப்பிளின் புதிய சேவைகளை அறிமுகம்
உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் பல்வேறு புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன.ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில், ஆப்பிள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதில், புதிய ஐபோன்கள் மற்றும் பல்வேறு புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்படும்.ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வசிகள் அறிமுகப்படுத்தும் நிகழ்வு அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் டிம் குக் ஆப்பிளின் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தினார்.
இந்தாண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆப்பிள் டிவி பிளஸ் சேவை அறிமுகமானது. இதன்மூலம், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனமும் களம் இறங்கியுள்ளது.இதில் ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், நடிகை ஜெனிஃபர் அனிஸ்டன், ஓப்ரா வின்ஃப்ரே ஆகியோரது படைப்புகள் முதற்கட்டமாக வெளியிடப்படவுள்ளன.
இதேபோன்று 'கேமர்'களுக்காக ARCADE எனும் செயலியையும், செய்தி ஆர்வலர்களுக்காக, NEWS PLUS எனும் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட கண்டுபிடிப்புகளில் அதிகமானோர் கவனத்தை ஈர்த்தது ஆப்பிள் கிரெட்டு கார்டு. இந்த புதிய கிரெடிட் கார்டினை 'ஆப்பிள் பே' பயன்படும் அனைத்து சேவைகளிலும் பயன்படுத்தலாம். பயனர்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் ஆப்பிள் கார்டு கொண்டு பயனர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் அவற்றை எங்கு வாங்கினார்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சேகரிக்கப்படாது.
மேலும் இந்த ஆப்பிள் கார்டில் கிரெடிட் கார்டு நம்பர், சிவிவி எண் உள்ளிட்ட எதுவும் இடம்பெற்றிருக்காது. இத்தகைய தகவல்கள் அனைத்தும் ஐபோனின் வாலெட் பகுதியில் இடம்பெற்றிருக்கும். இதுதவிர ஆப்பிள் கார்டு மூலம் செய்யும் பரிமாற்றங்களுக்கு 2 சதவிகித கேஷ்பேக் மற்றும் இதை பயன்படுத்தி ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை வாங்கினால் 3 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்ட் கட்டணத்தை தாமதாக செலுத்தினால் எவ்வித கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்பது கூடுதல் தகவல். தற்போதுவரை இந்த சேவையை குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இது இந்தியாவில் இந்த சேவை அறிமுகப்படுத்த உள்ளது என்று கூறப்படுகிறது.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!