Viral
அண்ட்ராய்டின் புதிய பதிப்பின் பீட்டா வெர்சனை வெளியிட்டது கூகுள்
கூகுள் நிறுவனம் புதிய ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு ஆண்ட்ராய்டு கியூ பீட்டா என்று கூகுள் நிறுவனம் பெயரிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் 2019 ஆம் ஆண்டில் அணைத்து மொபைல்களுக்கும் கிடைக்குமென்று கூகுள் அறிவித்துள்ளது.
இந்த புதிய கூகுள் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா அப்டேட் தற்பொழுது கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாகக் கூகுள் தனது ஐ.ஓ(I/O) நிகழ்வில் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் மற்றும் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.அதேபோல் கூகுள் நிறுவனம் இம்முறையும் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் புதிய இயங்குதளம் மற்றும் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் கூடுதலாகத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன் மடிக்கக்கூடிய சாதனங்களுக்கென தனிப்பட்ட மேம்படுத்தப்பட்ட சேவைகளையும் இந்த புதிய ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் அறிமுகம் செய்துள்ளதாகக் கூகுள் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த புதிய ஆண்ட்ராய்டு இயங்குதள வெளியிடப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள் முன்னர் வெளியிட்ட ஆண்ட்ராய்டு பை 9 இயங்குதளம் இன்னும் பல மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்காத நிலையில் தற்பொழுது ஆண்ட்ராய்டு கியூ அனைவர்க்கும் கிடைக்குமென்று கூகுள் தெரிவித்துள்ளது எப்படி சாத்தியம் என்று எண்ணவைக்கிறது.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !