Tamilnadu
5 தொகுதியில் 2 தொகுதியில் மட்டுமே தேர்தல் நடத்த அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு என்ன?
சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி. விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.
இவர்களது வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்றுதீர்ப்பளித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது.
அதே நேரத்தில், திருச்சி கிழக்கு, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read
-
“இலட்சியப் பாதையில் முன்னேறு” : இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
“சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்.. Greatest Of All Time” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
“த.வெ.க-வின் Vulgar Warriors குறித்தும் விஜய் வாயே திறப்பதில்லை” : மேயர் பிரியா கண்டனம்!
-
“திருப்பரங்குன்றத்தில் த.வெ.க. அரசு நடந்து கொண்டது கொள்கை அல்ல, பயம்” : முரசொலி தலையங்கம்!
-
“அட்றா சக்க, அந்த மாஸ் ஜோசப்பே...” : அமைச்சர் ராஜ்மோகனுக்கு தி.மு.க பதிலடி!