Tamilnadu

28 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா : அதிரடி ஆஃபர் அறிவித்த ஜியோ நிறுவனம்!

10-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 'Happy New Year 2.0' என்ற பெயரில் புதிய ரீசார்ஜ் சலுகைகளையும், அன்லிமிடெட் டேட்டா திட்டங்களையும் அறிவித்துள்ளது.

அதன்படி, ரூ.399 (28 நாட்கள்) மற்றும் ரூ.3,999 (ஒரு வருடம்) ஆகிய திட்டங்களில் தினமும் வழங்கப்பட்டு வந்த 2.5 GB டேட்டா வரம்பு நீக்கப்பட்டு, தற்போது அன்லிமிடெட் 4G மற்றும் 5G டேட்டாவாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், தினசரி 100 இலவச SMS-களும் இந்தச் சலுகையில் கிடைக்கும்.

மேலும், இந்தத் திட்டங்களுடன் JioHotstar மொபைல் சந்தா, Canva Pro, FanCode மற்றும் 50 GB JioAICloud ஸ்டோரேஜ் ஆகியவை கூடுதல் சலுகைகளாக வழங்கப்படுகின்றன.

இவற்றுடன் கூடுதல் டேட்டா ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரூ.15-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு அன்லிமிடெட் 5G டேட்டாவும், ரூ.25-க்கு ரீசார்ஜ் செய்தால் 2 நாட்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா சலுகையும் கிடைக்கும்.

மேலும் பம்பர் ஆஃபராக, ரூ.50-க்கு ரீசார்ஜ் செய்தால் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அன்லிமிடெட் 4G மற்றும் 5G டேட்டா வசதி 28 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகைகள் நாளை முதல் தொடங்குகின்றன.

இந்த அதிரடி ஆஃபரால் ஜியோ பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Also Read: “கோழைகளின் செயல்” : ஈரோட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகள் சேதம் - தங்கம் தென்னரசு கண்டனம்!