Tamilnadu
அலைகளோடு போராடி... உணவளிக்கும் மீனவ மக்களுக்கு வாழ்த்துகள்! : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் 1997ஆம் ஆண்டு உலக நாடுகளின் நிகராளிகள் ஒன்றிணைந்து உலக மீனவர் மன்றத்தை (World Fisheries Forum - WFF) உருவாக்கினர். அம்மன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 1998ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவ.21 அன்று ‘உலக மீனவர் நாள்’ கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில், 2026ஆம் ஆண்டிற்கான உலக மீனவர் நாள் இன்று (நவ.21) கொண்டாடப்படுவதையொட்டி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:
“மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு உலக மீனவர் நாள் வாழ்த்துகள்!
தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.
அத்தகைய மீனவ மக்களுக்காக நமது திராவிட மாடல் ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை.
மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்!
அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்!”
Also Read
-
“மொத்த மக்களும் பீதியில் வாழ்வது டி.ஜி.பி.க்குத் தெரியாதா?” : முரசொலி தலையங்கம் கடும் கண்டனம்!
-
குற்றங்களைக் குறைக்க ‘யாக பூஜை’... உத்தரப் பிரதேசத்தைப் பின்தொடரும் தமிழ்நாடு! - த.வெ.க. ஆட்சியின் அவலம்!
-
“கேலிச்சித்திரத்தை உடனே நீக்க வேண்டும்” : ஜூனியர் விகடனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
-
“இத விட உங்களுக்கு கிழிக்கிற வேலையும் இல்ல.. வேற ** இல்ல..” - IAS IPS அதிகாரிகளை ஆபாசமாக பேசிய தவெக MLA!
-
இதற்கும் DGP-ஐ விட்டுச் சமாளிக்கப் போகிறாரா Dummy CM? : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!