Tamilnadu

மக்கள் வரிப்பணத்தில் டெல்லி சென்ற விஜய் மேகதாது அணை குறித்து பேசாதது ஏன்? : இ.பரந்தாமன் சரமாரி கேள்வி!

டெல்லி சென்ற முதல்வர் விஜய் மேகதாது அணை பிரச்சினை குறித்து பேசாதது தொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் இன்று செய்தியாளர்ளை சந்தித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

முதலமைச்சர் டெல்லிக்குப் போயிருக்கார். டெல்லிக்குப் போனவர் எல்லாரும் ஹோட்டல்ல முன்வாசல் வழியா போனா, இவர் மட்டும் ஒரு புது வாசலைக் கண்டுபிடிச்சு பின்வாசல் வழியில போயிருக்கார்.

இதுக்கு என்ன சூட்சமம்னு பார்த்தா, காலையில தமிழ்நாட்டிலிருந்து போன மந்திரி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன், வடநாட்டு மந்திரி மாதிரி கோர்ட் சூட்டுல்லாம் மாட்டிக்கிட்டு ஏதோ டெல்லிக்குப் போய் தமிழ்நாட்டினுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசிட்டு இவங்க பேட்டி கொடுப்பாங்கன்னு பார்த்தா, பழைய புளிச்சுப் போன பிரச்சினைகளைப் பற்றியே இவங்க பேட்டி கொடுத்திருக்காங்க.

தமிழ்நாட்டினுடைய முதலமைச்சருக்கும் சரி, டெல்லி தமிழ்நாடு இல்லத்து வாசல்ல இருந்து கோட்டு மாட்டிக்கிட்டு பேட்டி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் சரி, தமிழ்நாட்டுடைய மக்கள் சார்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பா நாங்க உங்ககிட்ட கேட்கிற கேள்வி:

நேற்றைக்கு உங்களுடைய முதலமைச்சர் மதிப்பிற்குரிய அம்மையார் சோனியா காந்தி பக்கத்தில் இருந்தாரு கர்நாடகத்தினுடைய முதலமைச்சர் டி.கே. சிவகுமாரோட உட்கார்ந்திருந்தாரு. மேகதாது அணையைப் பற்றிப் பேசுறீங்களா? மேகதாது அணை கட்டுவது குறித்து, அதை கட்டக்கூடாது என்று கோரிக்கையை நீங்க வச்சீங்களா?

முதலமைச்சருக்கு மேகதாது அணையைப் பற்றிப் பேசுறதுக்கு துப்பில்ல. பத்திரிக்கையாளர்களைச் சந்திச்சு கருத்துக்களைச் சொல்றதுக்கு வக்கில்ல இந்த அமைச்சருக்கு. ஆனால் தமிழ்நாட்டில் அரசியலை மடைமாற்றம் செய்வதற்காக ஏதேதோ பிரச்சினைகளைப் போய் டெல்லியில போய் உட்கார்ந்துகிட்டு பேசுறாங்க.

நாங்க கேட்கிறது எல்லாம், கர்நாடக மாநிலத்தினுடைய அமைச்சர் டி.கே. சிவகுமார் அவர்கள் அண்மையில வந்து பிரதமர் நரேந்திர மோடியோட அரசு விழாவில, மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்கிற விழாவுல, ரெண்டு பேரும் ஒரே மேடையில் இருந்து பேசும்போது, முதலமைச்சர் டி.கே. சிவகுமார் சொல்றார்:

மேகதாது அணையை நாங்க கட்டியே தீருவோம். யார் தடுத்தாலும் நாங்க கட்டித் தீருவோம். எங்களுக்கு வீ நீட் கோஆபரேஷன் ஆஃப் தி யூனியன் கவர்மெண்ட். ஒன்றிய அமைச்சகத்தினுடைய, ஒன்றிய அரசினுடைய ஒத்துழைப்பு இருந்தால் மட்டும் போதும், நாங்க கட்டி முடிப்போம்னு சொல்றாங்க.

தேவகௌடா என்ன சொல்கிறார்? இது 50 வருடங்களுக்கு முன்னாடி உள்ள தீர்ப்பு. அன்றைக்கு இருக்கக்கூடிய காலகட்டத்தை வைத்துக்கொண்டு நீங்கள் பேசினால் சரியாக வராது என்ற ஒரு கருத்தைச் சொல்கிறார். இன்னைக்கு எதை நோக்கிப் போகிறது என்றால், தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஒரு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. காவிரி டெல்டா விவசாயிகளுக்கு அந்தப் பகுதியை வறண்ட பாலைவனமாக ஆக்குவதை நோக்கி விஜய் போய்க்கொண்டிருக்கிறார்.

கர்நாடக முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தில் என்ன வாதம் வைக்கிறார்கள்? எப்படி சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்தார்களோ, பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து சிந்து நதி பாய்கிறது. அங்கு அணை கட்டியிருக்கிறார்கள். கொஞ்சம் ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் அந்த அணையைச் சிதைத்த காரணத்தினால், ஏற்கெனவே போட்ட ஒப்பந்தத்தை எப்படி ரத்து செய்தார்களோ, அதுபோல காவிரி நதிநீர் ஆணையத்தினுடைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வாதம் வைத்திருக்கிறார்கள்.

அப்போது பாகிஸ்தானுக்குக் கொடுக்கக்கூடிய தண்ணீரை இந்திய அரசாங்கம் எப்படி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத் தண்ணீரை நிறுத்தியிருக்கிறதோ, அதை ஒப்பிட்டு அவர்கள் வாதங்களை வைத்திருக்கிறார்கள்.

அப்போது தமிழ்நாட்டைப் பாகிஸ்தானாகப் பார்க்கிறார்களா? தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுக்கின்ற எண்ணம் காங்கிரஸ் ஆட்சிக்கும், கர்நாடக ஆட்சிக்கும் இல்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. தமிழ்நாட்டில் அமைச்சரவை இடம் பெற்றிருக்கிறது.

சோனியா காந்தியினுடைய புத்தக வெளியீட்டு விழாவுக்குப் போயிருக்கக்கூடிய ஜோசப் விஜய், டி.கே. சிவகுமாரிடம் இதைப் பற்றிப் பேசவில்லை. ஜஸ்ட் ஒன் மினிட்! இங்கே சோனியா காந்தி இருக்கிறார், இங்கே ராகுல் காந்தி இருக்கிறார், இங்கே டி.கே. சிவகுமார் இருக்கிறார். நடுவில் ஒரு பிள்ளையாக இருக்கிறார்.

கொஞ்சம் பேசுங்கள். நாமெல்லாம் கூட்டணியில் இருக்கிறோம், ஒன்றாக இருக்கிறோம். இந்த மேகதாது அணையைக் கட்ட வேண்டாம் என்று சொல்லுங்கள். எங்களுக்குக் கொடுக்க வேண்டிய தண்ணீர் பேக்லாக்கிங் இன்னும் பேலன்ஸ் இருக்கிறது. அதை கொடுங்கள் என்று கேட்பதற்கு எவ்வளவு நேரம் சார் ஆகும்?

அதைக் கேட்பதற்கு இவருக்கு வக்கு இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் வேறு வேறு மடைமாற்ற அரசியலைப் பற்றி இவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே தேவகௌடா ஒரு கருத்தைச் சொல்கிறார். 50 வருடங்களுக்கு முன்னால் உள்ள தீர்ப்பை மறுபடியும் நாம் அதையே ஏற்றுக்கொள்ள வேண்டுமா? மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அங்கே ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரு வரிசையில் நிற்கிறது. ஒரு அணியில் நிற்கிறது.

இங்கே தமிழ்நாட்டினுடைய முன்னாள் முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர், எங்கள் தலைவர், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று சொல்கிறார். இதுவரைக்கும் செய்யவில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியில் இரண்டு முறை கூட்டப்பட்டு, இரண்டு முறை தமிழ்நாட்டு அரசின் சார்பாகப் பிரதிநிதிகள், சட்டமன்றக் கட்சியினுடைய தலைவர்கள் எல்லாம் ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரைப் போய்ச் சந்தித்து வந்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஜூன் மாதம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்தத் தீர்மானத்தில் எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர், அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்தார். இந்த மேகதாது அணை கட்டுவது குறித்து ஒரு ட்ரிப்யூனல் அமைக்க வேண்டும் என்று ஒரு திருத்தத்தைச் சொன்னார். அந்தத் திருத்தத்தை ஏற்றுக்கொண்டு நீங்கள் தீர்மானத்தை நிறைவேற்றினீர்கள்.

நான் கேட்பதெல்லாம், டெல்லிக்கு கோர்ட் சூட் மாட்டிக்கொண்டு போனீங்களே முதலமைச்சர் அவர்களே, இந்த ட்ரிப்யூனல் அமைப்பது பற்றி நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இதுவரைக்கும் தமிழ்நாட்டில் தீர்மானம் போட்டு, ஜூன் மாதம் தீர்மானம் போட்டு, இதுவரைக்கும் தமிழ்நாட்டில் நீங்கள் வந்து இந்த ட்ரிப்யூனல் அமைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? உச்சநீதிமன்றத்துக்கு இந்த ட்ரிப்யூனல் அமைக்கச் சொல்லிப் போய் நீங்கள் மனு போட்டீர்களா? இதுவரைக்கும் இது குறித்து அட்வகேட் ஜெனரலையோ, சொலிசிட்டர் ஜெனரலையோ நீங்கள் கூப்பிட்டு இதற்காக டிஸ்கஸ் பண்ணியிருக்கிறீர்களா? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? மேகதாது அணை கட்டுவதைத் தடுப்பதற்கு உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பத்து தினங்களுக்கு முன்னாடி நீங்கள் வந்து கடிதம் எழுதினீர்கள். எங்களைப் பார்த்துக் கேட்டீர்கள், கடிதம் மட்டும் எழுதினால் போதுமானா என்று. இப்ப நீங்களும் அதைத்தானே செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் இதன் மூலமாகச் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஆட்சியில் இருக்கக்கூடிய இந்த த.வெ.க. கட்சி, தமிழ்நாட்டினுடைய மக்களுடைய நலனைப் பற்றி கொஞ்சம்கூட அக்கறை இல்லாமல், நாள்தோறும் ஒவ்வொரு மந்திரியும் ஒவ்வொரு விதமான உடை அணிந்துகொண்டு வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து மடைமாற்றுகிற அரசியல் பண்றாங்களே தவிர, மக்களுக்குத் தேவையான பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் கொஞ்சம்கூட அக்கறை கிடையாது.

இவ்வளவு தூரம் ஸ்பெஷல் பிளைட்டில், சார்ட்டர்ட் பிளைட்டில் அரசினுடைய செலவில் நீங்கள் டெல்லிக்குப் போய், நட்சத்திர ஹோட்டலில் கூடி குலாவி ஒன்றாக டின்னர் சாப்பிடுறீங்களே, தமிழ்நாட்டுடைய பிரச்சினையைப் பற்றி ஏன் பேசவில்லை?

தமிழ்நாட்டுடைய மக்களுடைய வரிப்பணத்தில் கட்டக்கூடிய அந்தப் பணத்தின் மூலமாக ஸ்பெஷல் பிளைட்டில் போகிற முதலமைச்சர் அவர்களே, காவிரி நதிநீர் பிரச்சினை, காவிரிப் படுகையில் இருக்கக்கூடிய விவசாயிகள், விவசாயிகளுடைய பிரச்சினையைப் பற்றி ஏன் நீங்கள் பேசவில்லை? இதுதான் நாங்கள் உங்கள் முன்னாடி வைக்கக்கூடிய கேள்வி. மக்களின் சார்பாக வைக்கக்கூடிய கேள்வி.

அதை விட்டுவிட்டு, கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் பொழுது விடிந்தால் போதும், ஒரு பத்திரிகைக்காரங்களைப் பார்த்து திமுக மேல பழி போடுறது.

உடனே இது வந்து திமுக வந்து இன்னைக்கு ராஜமோகன் எதற்காகப் பேட்டி கொடுத்தார், உங்களுக்கெல்லாம் தெரியும். புக் பற்றிதான். திமுகதான் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கு. DVAC ரெஜிஸ்டர் பண்ணியிருக்காங்க. இது வந்து அந்த கமிட்டிக்கு அப்பாற்பட்டு பிரிசர்வ் ஏற்பாடுன்னு சொல்லியிருக்காங்க.

இன்னும் சொல்லப்போனால், மதுரை பெஞ்ச் வந்து 20 ஆண்டுகளாக இது நடந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டிருக்காங்க. இப்ப ஒரு வழக்கு காக்னிசன்ஸ் எடுத்து நீதிமன்றப் பார்வையில் இருக்கக்கூடிய விஷயத்தை வெளியில வந்து வாய்க்கு வந்த மாதிரி பேசிக்கிட்டு, திமுக மேல பழியைச் சுமத்துறது, வழக்கினுடைய போக்கைத் திசை திருப்புறது, இதுதான் வேலையா? டெல்லியில் போய் பேட்டி கொடுக்கத்தான் வேலையா?

மேகதாது அணையைப் பற்றிப் பேசுவதற்கு இவங்களுக்கு வக்கு இல்ல. அதனால இந்த அமைச்சர் வந்து இந்த பிரஸ் மீட் போட்டதே வந்து ஒரு ஹம்பக்தான். நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் எல்லாரும் ஒன்று கூடி டெல்லிக்குப் போனீங்களே, நீங்கள் என்ன பண்ணீங்கன்னு சென்னைக்கு வந்த உடனே யாரும் கேட்கக்கூடாதுன்றதுக்காகத்தான் இந்த பிரஸ் மீட்டைப் போட்டு இவர் வந்து மற்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசுறார்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் கேள்விக்கு பதில் :-

இந்தியப் பிரதமர் மோடி அவர்களிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லைதான். டி.கே. சிவகுமார் அவங்க கட்சியினுடைய முதலமைச்சரே சொல்லிட்டாரே, நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் போதும் என்று.

ஏற்கெனவே இந்த மேகதாது அணை கட்டுற விஷயமாக டிபிஆர் தயார் செய்யும்போது, 2018-லேயே இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பாக அன்றைக்கு இருந்த அதிமுக அரசாங்கமும் சரி, அதற்குப் பின்பு வந்த எங்களுடைய திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கமும் சரி, உச்சநீதிமன்றத்திலயும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் நாங்க அஜிடேட் பண்ணியிருக்கிறோம்.

ஆனா உச்சநீதிமன்றம் என்ன சொன்னது? இது வந்து ப்ரீமெச்சூர் ஸ்டேஜ். நீங்கள் டிபிஆர் தயார் பண்ணிய பிறகு அதற்கப்புறம் வாங்கன்னு சொல்லிட்டாங்க.

இப்போ அதெல்லாம் தாண்டி, முதலமைச்சர் ஜோசப் விஜய் வந்த பிறகு ட்ரிப்யூனல் அமைக்கணும்னு சொல்லி நாம வந்து தீர்மானம் போட்டுட்டோம். இதுவரைக்கும் அதைப் பற்றி அவர் எதுவுமே பேசவே இல்லை. அமைதியா இருக்கார்.

இப்போ எங்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகம் என்னன்னா, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சந்தேகம் என்னன்னா, அவங்களுடைய வாதம் என்னன்னா, இந்த காவிரி நடுவர் ஆணையத்தினுடைய, காவிரி நதிநீர் ஆணையத்துக்கு கொடுக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பையே இவங்க வந்து ரிவ்யூக்கு கொண்டு போறாங்க. அதாவது மாற்றி அமைப்பதற்காகக் கொண்டு போறாங்க. அதற்கான சட்டச் சிக்கல்களை உருவாக்குறாங்க.

அவங்களுடைய இன்டென்ஷன் என்ன? ஹானரபிள் சீஃப் மினிஸ்டர் ஆஃப் கர்நாடகா அவர்களுடைய இன்டென்ஷனும், முன்னாள் இந்தியப் பிரதமர் தேவகௌடா அவர்களுடைய இன்டென்ஷனும் என்ன?

இது 50 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட தீர்ப்புன்னு சொன்னாங்கன்னா, அப்ப என்ன வராங்க? அப்போ நாம வந்து காவிரி நதிநீர் ட்ரிப்யூனல் உருவாக்கினது, உச்சநீதிமன்றத்தின் மூலமா தீர்ப்பு வாங்கினது, தீர்ப்பு வாங்கி உருவாக்கின அந்த ஜட்ஜ்மென்ட்டை இப்ப வந்து இவங்க பின்னோக்கிக் கொண்டு போறாங்க. மறுபடியும் வந்து ரீடூ எக்சர்சைஸ் போறாங்க.

அப்ப நமக்கு கொடுக்கப்பட்ட அந்த இன்டரிம் மெஷரா 205 டிஎம்சி தண்ணி கொடுக்கிறது, 435 டிஎம்சி மொத்தமா கொடுக்க வேண்டியது. அப்ப இதை எல்லாத்தையும் உங்க ரிவ்யூக்கு கொண்டு போறாங்கன்னா, அவங்களுடைய எண்ணம், வாதம் என்ன?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போகக்கூடிய சிந்து நதியினுடைய, இண்டஸ் ரிவருடைய இஷ்யூவை எப்படி அந்த அக்ரிமெண்ட் கேன்சல் பண்ணாங்களோ, எப்படி மறுபரிசீலனை இந்திய அரசாங்கம் செஞ்சதோ, அதுபோல வந்து இந்த ஜட்ஜ்மென்ட்டை ரிவ்யூ பண்ணணும்ன்ற ஒரு மோசமான, ஆபத்தான பாதையை நோக்கி காங்கிரஸ் அரசாங்கம், கர்நாடக அரசாங்கம் போகும்போது, இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு ரியாக்ட் பண்ணாம இருக்கிறது எவ்வளவு பெரிய துரோகம்?

நாளைக்கு காவிரிப் படுகை வந்து பாலைவனம் ஆகப்போகுது. இந்தத் தண்ணி வராம இவங்க டேம் கட்டிட்டு, இந்த ட்ரீட் பாகிஸ்தானுக்கு இந்தியா இருக்கிற ஒப்பந்தத்தை ரத்து பண்ண மாதிரி நிறுத்துன மாதிரி, இந்த ஜட்ஜ்மென்ட்டை வந்து நம்ம ரிவ்யூ பண்ணணும். இது 50 ஆண்டுகளுக்கு முன்னாடி போட்ட ஜட்ஜ்மென்ட் அப்படின்னு சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு இடத்துக்கு வந்திருக்காங்கன்னா, அப்போ காவிரி நதிநீர் ஆணையத்தை இவங்க கலைக்கிறதுக்கு முயற்சிக்கு வராங்க. அதை நோக்கிப் போறாங்க.

உச்சநீதிமன்றத்தில் இவங்க இன்னைக்கு இருக்கக்கூடிய பிரசன்ட் சிச்சுவேஷனை நீங்கள் கருத்தில் கொண்டு, எங்களுடைய கர்நாடகாவினுடைய பாப்புலேஷன், கர்நாடகத் தேவைகள் இதெல்லாம் இருக்கிறதுனால மறுபடியும் வந்து நீங்கள் ரீ-எக்ஸாமின் பண்ணுங்க அப்படிங்கிற ஒரு வாதத்தை வைத்து அதை நோக்கிப் போறாங்க.

அப்படின்னா தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஒரு ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறோம் என்பதை ஏன் முதலமைச்சர் உணராமல் இருக்கிறார்? முதலமைச்சருக்கு இதெல்லாம் புரியுதா இல்லையான்றதுதான் எங்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பதற்றம்.

செய்தியாளர் கேள்விக்கு பதில் :-

சார், இப்போ மேகதாது அணை கட்டக்கூடாது ஏன்னா ஒவ்வொரு காலகட்டத்திலும் உச்சநீதிமன்றத்தினுடைய இந்தத் தீர்ப்பே வந்து கீழமை மாநிலங்கள், தண்ணி மேலிருந்து கீழே போகும்…

அதாவது மேலிருந்து தண்ணி கீழே போகும். அந்தத் தண்ணி கீழே வந்து காவிரியினுடைய கடைமடை வரை வரக்கூடிய இடம் தமிழ்நாடு. இந்தத் தண்ணி ஓடி கடலில் சேரக்கூடிய அல்லது கடைமடைக்குப் போகக்கூடிய இடம் எந்த மாநிலமாக இருக்கிறதோ, லோயர் ரிப்பரியன் ஸ்டேட்ஸ் எது இருக்கிறதோ, அந்த ஸ்டேட்களுக்கு மிகப்பெரிய ஒரு உரிமை இருக்கு.

அப்படி இருக்கும்போது கர்நாடகா மேல அணையைக் கட்டிடுச்சுன்னா தண்ணி கீழே வராது. அப்போ தஞ்சாவூர் பகுதியில், காவிரி டெல்டா பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணி வராமல் போச்சுன்னா விவசாயம் பண்ண முடியாது. நீங்கள் வந்து இதையெல்லாம் வேளாண்மை மண்டலமாக அறிவிச்சதெல்லாம், அதற்கப்புறம் வந்து பாலைவன மண்டலமாகத்தான் போயிரும்.

Also Read: கழுத்து, இதயம், நுரையீரல், முதுகு… காயங்களுடன் பிணமான பாலகிருஷ்ணன் - த.வெ.க அரசின் காட்டுத் தர்பார்!