Tamilnadu
“போலீசுக்கு வக்கு இருக்குதா?” : பெண் போலீசாரை கடுமையாக வசைபாடிய திருப்பூர் தவெக நிர்வாகி -வீடியோ வைரல்!
திருப்பூர் தெற்கு போக்குவரத்துக் காவல் துறையினர் பல்லடம் சாலை சந்தைப்பேட்டை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல், செல்போனில் பேசிக்கொண்டு வாலிபர் ஒருவர் பைக்கில் வந்துள்ளார். அவரை மறித்த போலீசார், அவருக்கு அபராதம் விதிக்க முற்பட்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த அந்த நபர் "நான் யாரென்று தெரியுமா? ஆளுங்கட்சியில் இருக்கிறேன்.. நா ஒரு ஆளுங்கட்சியோட நிர்வாகி.. ஒரு போன் போட்டால் என்ன ஆகும் தெரியுமா?" என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து அவரது நண்பருக்கும் போன் செய்துள்ளார்.
அதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த தவெக தென்னம்பாளையம் பகுதி கழக இளைஞர் அணி இணை அமைப்பாளர் விக்னேஷ் போக்குவரத்து போலீசாரிடம் எதற்காக வாகனத்தை நிறுத்தி உள்ளீர்கள் என கேட்டும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து அங்கு பணியில் இருந் போக்குவரத்து பெண் காவலரிடம் திமிராக பேசிய தவெக நிர்வாகி, "வாகனத்தை எடுத்துச் செல்ல போலீசாருக்கு வக்கு இருக்கிறதா? அதனை பத்திரமாக வைக்க வக்கு இருக்கிறதா?" என்று காவலர்களை தரக்குறைவாக பேசி வசைபாடியுள்ளார். தொடர்ந்து போலீசாரிடம் அந்த நபர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் தலைக்கவசம் அணியாமல் வந்தது, செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கியது, முன்பக்க நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, பக்க கண்ணாடிகள் இல்லாதது, போலீசாரிடம் தரக்குறைவாக நடந்து கொண்டு பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
தான் ஆளுங்கட்சியில் இருப்பதால் தவெக-வினர் பல்வேறு அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், போலீசாரையும் மதிக்காமல் செயல்பட்டு வருவது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
Also Read
-
த.வெ.க. MLA அருள் விக்னேஷின் விபரீத செயல்.. 7 நாட்களில் ரிப்போர்ட் வேண்டும்.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி!
-
கோவையில் த.வெ.க நிர்வாகியின் அடாவடி.. “பெரிய ரவுடியாடா நீ” வெளுத்து வாங்கிய பெண்!
-
Mad Sandhu கொலை வழக்கு : அமிதாப் பச்சனும் Target.. 2 பேரிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து ஷாக்!
-
Tanishq கொள்ளை : முகமூடி, டாட்டூவால் சந்தகமடைந்த போலீஸ்... இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி சிக்கியது எப்படி?
-
“21-ஆம் நூற்றாண்டின் உத்தமர் இவர்தான்” : த.வெ.க அமைச்சருக்குப் பதிலடி கொடுத்த எ.வ.வேலு!