Tamilnadu
“21-ஆம் நூற்றாண்டின் உத்தமர் இவர்தான்” : த.வெ.க அமைச்சருக்குப் பதிலடி கொடுத்த எ.வ.வேலு!
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடி ஏரியில் இளைஞரணி மாநாட்டிற்காகச் சட்டவிரோதமாக மண் அள்ளியதாக கூற்றப்படும் வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சம்மன் அனுப்பினர்.
அதைத் தொடர்ந்து, இன்று திருவண்ணாமலையில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எ.வ.வேலு நேரில் ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ.வேலு பின்வருமாறு, ”த.வெ.க அரசு திட்டமிட்டு என் மீது பொய் வழக்கைப் போட்டுள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன்.
ஊழல்.. ஊழல்.. என்று திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடாது. முந்தைய ஆட்சியாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதையே த.வெ.க அரசு முழுநேரப் பணியாக வைத்துள்ளது. தி.மு.க-வுக்கு எதிராகத் த.வெ.க அரசு கட்டமைக்கும் பொய்க் குற்றச்சாட்டுகள் மக்களிடம் எடுபடாது.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மக்கள் நலனில் த.வெ.க அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை.
பொதுப்பணித்துறையைப் பற்றி முதலில் ஆதவ் அர்ஜுனா தெரிந்துகொண்டு பேச வேண்டும்; ரீல்ஸ் வீடியோவுக்காகப் பேசக் கூடாது. 21-ஆம் நூற்றாண்டின் உத்தமர் காந்திதான் இந்த ஆதவ் அர்ஜுனா" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கடலூர் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 5 பெண்கள் மாயம்… சிங்கப்பெண் படை என்ன செய்து கொண்டு இருக்கிறது?
-
சென்னை to கேரளம்.. முகக்கவசம், 600 CCTV.. மூதாட்டியிடம் திருடிய நகைகளால் வள்ளலான நடிகர் சிக்கியது எப்படி?
-
8 ரூபாய் கேக் பாக்கெட்டுக்கா இவ்வளவு பீடிகை : அமைச்சர் ராஜ்மோகனுக்கு தி.மு.க பதிலடி!
-
“காவல் நிலையங்களில் தொடரும் மரணங்களுக்கு Dummy CM பதில் அளிக்க வேண்டும்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் வளரட்டும்! : மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து!