Tamilnadu
6 மாத தவெக ஆட்சியில் 3-வது முறையாக குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு : தி.மு.க ஐடி விங் கண்டனம்!
மயிலாடுதுறை மாவட்டம், நீடூர் அருகே உள்ள வில்லியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னீர்வெளி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொட்டியில் இருந்து தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, இச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தவெக ஆட்சியில் 6 மாதத்தில் 3 தடவை குடிநீர் தொட்டியில் மலம் கலந்தபோதுகூட கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? என தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து தி.மு.க ஐடி விங் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”6 மாத தவெக ஆட்சியில 3-வது முறை குடிநீர் தொட்டியில மனிதக்கழிவு! வாய் மூடி மௌனமாக வேடிக்கை பார்க்கும் கூட்டணிக் கட்சிகளும் 'நடுநிலை' யோக்கியர்களும்!
இதுவே வேறு ஆட்சியாக இருந்திருந்தால், இந்நேரம் சமூக நீதி, மனித உரிமை எனப் பேசும் நாடகம் போடும் கட்சிகளும் ஆளுங்களும் இந்நேரம் பொங்கியிருப்பார்கள்! ஆனால் இப்போது தவெக கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரே காரணத்துக்காக, மக்கள் குடிக்கும் தண்ணீரில் மனிதக்கழிவு கலக்கும் அநியாயத்தைக் கூடத் தட்டிக்கேட்க வக்கில்லாமல் வாய் மூடிக் கிடக்கிறீர்களே, இதுதான் உங்கள் கொள்கையா?
நாங்கள் நடுநிலைவாதிகள், தப்பு நடந்தால் யாராக இருந்தாலும் கேள்வி கேட்போம் என்று சீன் போட்டவர்கள் எல்லாம் இப்போது எந்தப் பொந்துக்குள் போய் ஒளிந்துகொண்டீர்கள்? திமுக ஆட்சியில் சின்ன விஷயம் நடந்தாலும் "தமிழ்நாடே அழிந்துபோச்சு" என ஒப்பாரி வைத்த மீடியாவும், நடுநிலை கும்பலும், தவெக ஆட்சியில் 6 மாதத்தில் 3 தடவை குடிநீர் தொட்டியில் மலம் கலந்தபோதுகூட கள்ள மௌனம் சாதிப்பது ஏன்?" என விமர்சித்துள்ளது.
Also Read
-
“இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா?” : விஜய்யின் தீபாவளிப் பரிசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுத்திடுக.. டிஜிபி-யிடம் திமுக புகார் மனு!
-
பொதுமக்களைக் காக்க வேண்டிய போலீசாரும் அச்சத்தில் வாழ்கிறார்கள்! : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
தேவையற்ற காரணங்களைக் கூறி குரியன் குழு கலைப்பு! : த.வெ.க அரசுக்கு ‘தி இந்து’ நாளேடு கண்டனம்!
-
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயப் பணியிட மாற்றம்... டாஸ்மாக் ஊழியர்களை பழிவாங்க துடிக்கும் த.வெ.க அரசு!