Tamilnadu

தரங்கெட்ட வெங்காயம் கொள்முதல்... நடவடிக்கை எடுக்க முடியுமா? - CM விஜய்க்கு அப்பாவு சவால்!

தரங்கெட்ட வெங்காயத்தை கொள்முதல் செய்து கொள்ளையடித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தயாரா CM சார்? என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வியெழுப்பியதோடு, விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :-

கடந்த திமுகழக ஆட்சி காலத்தில் நியாய விலைக் கடைகளில் கருப்பு, கல் இல்லாத அரிசி எடை குறையாமல் இருக்க நியாய விலைக்கடையில் உள்ள எடை இயந்திரத்தோடு பில்லிங் இயந்திரம் இணைக்கப்பட்டு (POS) எடை குறைவில்லாமல் சுமார் 2 கோடியே 29 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சுமார் 35,000 நியாய விலை கடைகள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டதோடு, 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கே ரேஷன் பொருட்களை வழங்கியவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பது உங்களுக்கு தெரியுமா CM சார்?

தவெக ஆட்சி அமைந்ததும் மத்திய தொகுப்பில் இருந்து அனுப்பப்பட்ட அரிசியை விலை இல்லாமல் கொடுப்பதற்கு பதில், சன்னரக பொன்னி அரிசி என்று ஏழை மக்களை ஏமாற்றி கிலோ ரூபாய் 30-க்கு விற்பனை செய்து கொள்ளையடிப்பதுதான் தூய ஆட்சியின் லட்சணமா CM சார் ?

தரங்கெட்ட வெங்காயத்தை மக்கள் வரிப்பணத்தில் அதிக விலை கொடுத்து வாங்கி ஊழல் செய்து நியாய விலை கடை மூலம் விநியோகம் செய்து விட்டு பணியாளர்கள் மீது குற்றம் சுமத்தி பணிநீக்கம் செய்திருப்பதும், வெங்காய கொள்முதல் டெண்டரை ரத்து செய்திருப்பதும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா CM சார்?

ஊழல் செய்ய மாட்டேன், செய்ய விடவும் மாட்டேன், செய்தவர்களையும் விட மாட்டேன் என்று காட்டு கத்துக்கத்திய முதல்வரே, நீங்கள் பதவி நீக்கம் செய்ய வேண்டியது சாதாரண நியாய விலை கடை பணியாளர்கள் அல்ல; ஊழல் செய்த அமைச்சரை பதவி நீக்கம் செய்து விலையில்லா அரிசியை சன்னரக பொன்னி அரிசி என்று ஏமாற்றி விற்க வைத்த அதிகாரிகளையும், தரங்கெட்ட வெங்காயத்தை கொள்முதல் செய்து கொள்ளையடித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து நான் தூய ஆட்சிதான் நடத்துகிறேன் என்று நிரூப்பிக்க தயாரா CM சார்?

Also Read: விராலிமலை தேர்தலுக்காக.. ரூ.2000 மதிப்பிலான பொருட்கள் விநியோகம்? - தவெக மீது ரகுபதி பகீர் குற்றச்சாட்டு!