Tamilnadu

கோவை தி.மு.க அலுவலகத்திற்கு அடிக்கல்! : கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

கோவை அவினாசி சாலையில் இன்று (நவ.4) மாவட்டக் கழகத்திற்கான புதிய அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

கோவை நீலாம்பூரில் 21 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில், 3 தளங்கள் கொண்ட ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க அலுவலகமாக இக்கட்டிடம் நிறுவப்பட இருக்கிறது.

இதில் கீழ் தளத்தில் திருமண மண்டபம், முதல் தளத்தில் உணவருந்தும் இடம் என ஒருங்கிணைந்த தி.மு.க அலுவலகம், கூட்ட அரங்கம் அமைய உள்ளது.

வாகன நிறுத்தத்திற்கு ஏதுவாக குறிப்பிடத்தக்க நிலப்பரப்பில் 4 சக்கரம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைய உள்ளது.

தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த அடிக்கல்நாட்டு விழாவில், தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், முத்துசாமி, சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Also Read: ஆட்சி கவிழ்ப்பு கதையைச் சொல்லும் நிர்மல்குமார்.. நடவடிக்கை எடுங்கள், யார் தடுத்தது? - திமுக கேள்வி!