Tamilnadu

Prison Break-உம் தொடங்கிவிட்டது : ஆனோல், முதலமைச்சரோ Sleep Modeல் மட்டும்தான் இருக்கிறார் - DMK IT WING!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தினமும் கொலைகள் அரங்கேறி வருகின்றன. நாளிதழ்களைப் புரட்டினால் ஒரு நாளைக்கு 10 கொலைகளுக்கும் மேல் செய்திகளாக இடம் பெறுகின்றன.

த.வெ.க ஆட்சியில் சாதனைகளைக் காட்டும் கொலைகள்தான் நாளிதழ்களின் முதற்பக்கத்தில் வருகின்றன. அதோடு, த.வெ.க நிர்வாகிகளே பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளில் கைதாவது இன்னும் மக்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இப்படி சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருக்கும் நிலையில், கடந்த 5 மாதங்களில் மட்டும் சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியோடி இருப்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் மாதத்தில் செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறார்கள் தப்பிச் சென்றனர். அடுத்து ஜூலை மாதத்தில் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திலிருந்து ஒரு குற்றவாளியும், பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து ஒரு குற்றவாளியும் தப்பிச் சென்றனர்.

பின்னர் அதே ஜூலை மாதத்தில் செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து மீண்டும் 12 பேர் தப்பிச் சென்றனர். அப்போதும் கூட கவனமாக இல்லாததால், அடுத்த ஆகஸ்ட் மாதமே 11 பேர் தப்பியோடி இருக்கிறார்கள்.

இதையடுத்து அக். 10ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவமனையிலிருந்து ஒரு போக்சோ கைதி தப்பிச் சென்றார். பிறகு அக். 20ஆம் தேதி சென்னை புழல் சிறையிலிருந்து ஒரு குற்றவாளி தப்பித்த நிலையில், அடுத்த நாளே அக். 21ஆம் தேதி மற்றொரு குற்றவாளி தப்பிச் சென்று இருக்கிறார்.

தற்போது தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 குற்றவாளிகள் தப்பிச் சென்று இருக்கிறார்கள். அடுத்தடுத்து குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளது த.வெ.க. அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது.

இந்நிலையில்,ஒருபக்கம் கொலை, கொள்ளை, குழந்தைகள் காணமல் போகுதல் என அசம்பாவிதங்கள் நடந்தால் மறுபுறம் Prison Break-உம் தொடங்கிவிட்டது என தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி விமர்சித்துள்ளது.

இது குறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4-க்குப்பிறகு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவுக்கு போய்விட்டது; பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சரோ Sleep Modeல் மட்டும்தான் இருக்கிறார்.

ஒருபக்கம் கொலை, கொள்ளை, குழந்தைகள் காணமல் போகுதல் என அசம்பாவிதங்கள் நடந்தால் மறுபுறம் Prison Break-உம் தொடங்கிவிட்டது!

இந்த கோமாளி அரசையும், அமைச்சர்களையும் பார்த்தால் “மூஞ்சி மட்டும்தான் வேலை செய்யுது, மத்தது எல்லாம் அப்படியே இருக்கு” என்ற போக்கிரி வசனம் தான் நியாபகத்துக்கு வருகிறது” என விமர்சித்துள்ளது.

Also Read: வலிப்பு வந்ததாக நாடகம்... காவலரின் 2 பவுன் சங்கிலியை பறித்து தப்பியோடிய 17 கைதிகள்.. தேனியில் ஷாக்!