Tamilnadu
Attendance போடுவதற்கு முன் வரலாறு தெரிந்து பேசவும்: மாணிக்கம் தாகூருக்கு கனிமொழி என்.வி.என்.சோமு பதிலடி!
நாடு முழுவதும் SIR (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்) திட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமாக வெடித்து வருகிறது. தேர்தல் முறையில் முறைகேட்டில் ஈடுபட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி விலகக்கோரி டெல்லியில் தினந்தோறும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், SIR போராட்டத் திட்டத்தில் தி.மு.க எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை என அபாண்டமாகப் பொய் பேசியிருக்கும் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு, ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ளார், தி.மு.க மருத்துவர் அணித் தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு.
அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”Announcement இல்லாமல் ஆதரவு அளித்துகொண்டு முட்டுக் கொடுப்பதில் மூத்தவரான அன்பு நண்பர் அவர்களுக்கு வணக்கம், டெல்லியில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் “பெரும்பாலானோர்” அவையில் இல்லாவிட்டாலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் சார்பாக இந்தியா கூட்டணியின் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தனர்!
இந்திய ஜனநாயகத்தின் ஆயுதமான வாக்குரிமையை பாதுகாக்க SIR விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்து வாக்குச்சாவடிதோறும் முகாம்கள் அமைத்து செயல்பட்டது திமுக! 7.5 இலட்சம் நிர்வாகிகள் உழைத்ததால்தான் ஓரளவுக்கு மக்களின் வாக்குரிமை காக்கப்பட்டது!
உங்களுக்கும் சேர்த்துதான் கழகம் உழைத்தது! மறந்துவிடாதீர்!!
அவையிலும் சரி, நாடாளுமன்ற வளாகத்திலும் சரி, அனைத்து போராட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களுடன் கழகத்தலைவரின் அறிவுறுத்தலின்படி இணைந்து செயல்பட்டோம்! தொடர்ந்து குரல் கொடுத்தோம்!
ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி
வரும் நேரம் பார்த்து attendence போடும் உங்களை போல் சிலர் இவ்வாறு அவதூறுகளை வீசுவது அரசியல் மாண்புக்கு எதிரான ஒன்று!
SIRக்கு எதிரான போராட்டத்தில் திமுக கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கவும் விரும்புகிறேன்! உங்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி அவர்களுடன் போராடி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் புகைப்படத்தையும், வீடியோ காட்சிகளையும் இணைத்துள்ளேன்!
Delimitation விவகாரத்திலும் Joint Action Committee உருவாக்கி சாதித்துக் காட்டியவர் எங்கள் கழகத் தலைவர்!
SIRக்கு எதிரான முன்னெடுப்புகளை எங்களின் கழகத்தலைவர் இதற்கு முன்பும் சிறப்பான முறையில் முன்னெடுத்தார், நிச்சயமாக வருங்காலங்களிலும் முன்னெடுப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை! ஆனால் கூட்டணியில் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கும் போது, இப்போது மட்டும் திமுகவின் ஆதரவை பெற எதற்காக துடிக்க வேண்டும்? பதவிக்கு அங்கு! பாதுகாப்போடு போராடுவதற்கு இங்கு ஒரு சீட் போடுவது வெட்கக்கேடானது!
அடுத்த முறை குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்பு உங்கள் கூட்டணி முதலாளிகளைப் போல அல்லாமல் வரலாறு தெரிந்து வசனம் பேசுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கைது செய்தே காலத்தை ஓட்டிவிடலாம் என்கிற மிதப்பில் இருக்கிறாரா முதலமைச்சர்?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு! - த.வெ.க அரசின் அலட்சியத்தால் தொடரும் அவதி!
-
“டெல்லி ஓனர்களின் பாணியில் அடக்குமுறையை ஏவும் த.வெ.க. அரசை வன்மையாக கண்டிக்கிறேன்!” : உதயநிதி ஸ்டாலின்!
-
“பாத்ரூம் கூட போகவிடல”.. போராட்டத்துக்கு கிளம்பிய மருத்துவ பணியாளர்கள்.. வீட்டு காவலில் அடைத்த தவெக அரசு!
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச்சாயம் - பிரதமர் மோடியை வரவேற்று, வழி அனுப்பிய விஜய் கண்டனம் தெரிவித்தாரா?