Tamilnadu
மர்ம காய்ச்சலால் 1 வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அடுத்த காடுவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி சங்கீதா. இந்தத் தம்பதியினரின் ஒரு வயது ஆண் குழந்தை, கடந்த இரண்டு தினங்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளது.
இதற்காக ஆரம்பத்தில் பெற்றோர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் குழந்தையை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளைக் குழந்தைக்குக் கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை அக்குழந்தைக்குத் திடீரென மலக்குடல் வழியே இரத்தம் கசிந்துள்ளது. இதனைப் பார்த்துக் கடும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து, குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து திருவேற்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குழந்தையின் மரணத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : பல்லி விழுந்த சாப்பாடு.. தவெக அரசின் அலட்சியத்தால் 40 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
-
‘துரோகியே வெளியில் போ‘... தலைதெறிக்க ஓடும் த.வெ.க. வேட்பாளர்கள் : முரசொலி தலையங்கம்!
-
போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?
-
கனிமொழி எம்.பி-யின் ஒற்றைப் பதிவு.. சமூக வலைதளங்களில் படு வைரல்!
-
“தவெக பெயரை குறிப்பிடாதது ஏன்?” - பண மோசடியில் சிக்கிய வர்ஷினி வெங்கட் விவகாரத்தில் திமுக கேள்வி!