Tamilnadu

“Airport-ஐ தனியாருக்கு கொடுத்துடுங்க..”- TN Budget அன்றே மோடிக்கு கடிதம்.. கிழிந்த விஜயின் முகத்திரை!

தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் தவெக அரசு தமிழ்நாட்டை பின்னோக்கி இழுத்து செல்கிறது. பணவீக்கத்தில் (விலைவாசி உயர்வு) தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது, பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். அதோடு வந்து 3 மாதங்களுக்குள் ரூ.20 ஆயிரம் கோடி புதிதாக கடன் வாங்கிய, தமிழ்நாட்டை மேலும் கடனாளியாக மாற்றியுள்ளது விஜயின் தவெக அரசு.

இதுமட்டுமின்றி சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு என தமிழ்நாடு தொடர்ந்து கடந்த 4 மாதங்களாக மோசமாகி வரும் நிலையில், விவசாயிகள், மீனவர்கள், தூய்மை பணியாளர்கள் என அடுத்தடுத்து பொதுமக்களை தவெக அரசு கொடுமை செய்து வருகிறது.

தமிழ்நாடு இருக்கும் நிதிநிலையில் தற்போது ரூ.1200 கோடியில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகத்தை கட்ட முனைப்பு காட்டி வருகிறது ஆளும் தவெக அரசு. இந்த முடிவால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படும் அபாயம் இருக்கும் நிலையில், தங்களது வலுத்த எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வரும் நிலையில் கூட, இதுவரை அதனை திரும்பப்பெறவில்லை இந்த அரசு.

முன்னதாக ஜூன் மாதத்துக்கு முன்பே திறந்துவிட பட்டிருக்க வேண்டிய காவிரி நீரானது, 75-80 நாட்கள் தாண்டி கால தாமதமாக செப்டம்பர் 1-ம் தேதி திறக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று அடம்பிடித்த கர்நாடகாவை எதிர்த்து ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை முதல்வர் விஜய். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

கால தாமதமாக திறந்துவிடப்பட்ட காவிரி நீரால், "காவிரியில் தண்ணீர் வரத்து இல்லை, எனவே டெல்டா விவசாயிகள் இந்த ஆண்டு சம்பா சாகுபடியைக் கைவிடுவது நல்லது" என்று வேளாண் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

அதோடு காவிரி நீர் திறப்புக்காக, முதல்வர் விஜயின் வருகைக்கும், விளம்பரத்துக்கும் மட்டுமே சுமார் ரூ.5 கோடி அளவு செலவு செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் அண்மையில் சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க முதல்வர் விஜய், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாக செய்திகள் வெளியானது. தொடர்ந்து இதற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுக்க, ஆளும் தவெக அரசு வாயை திறக்காமல் இருந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது முதல்வர் விஜய் எழுதிய கடிதம் இன்று வெளியாகி, அது உண்மை என்று நிரூபணமாகியுள்ளது முதல்வர் விஜய் எழுதிய கடித்தத்தில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானப் பயணிகள் சிரமப்படுவதாலும், விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் மட்டும் ஒப்படைக்காமல், தனியார் நிறுவனங்களிடமும் ஒப்படைத்து மேற்கொள்ள வேண்டும்.

சென்னை விமான நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் விஜயின் கடிதத்தின் சாராம்சமாகும். இந்த கடிதத்தை முதல்வர் விஜய், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதியே பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார். சுமார் 50 நாட்களாக இந்த கடிதம் குறித்தோ, இதைப் பற்றியே வாயையே திறக்காமல் மௌனம் காத்து வருகிறது விஜய் அரசு.

இதில் வேடிக்கை என்னவென்றால், விமான நிலையத்தை தனியாருக்கு மாற்றக்கோரி விஜய் கடிதம் எழுதிய அதே ஆகஸ்ட் 5-ம் தேதி தான் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பேரவை நடத்துக்கொண்டிருக்கும்போதே இந்த விவகாரம் வெளியே வந்திருந்தால், பேரவையிலேயே எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியிருப்பர்.

அதோடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, ஆகஸ்ட் 28-ம் தேதி 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்தார். சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தாரை வார்க்க ஏற்கனவே முடிவு செய்து கடிதம் எழுதிவிட்டு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்து விஜய் நடத்திய நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளது.

Also Read: பச்சிளம் குழந்தைகளின் மருந்துக்கு தட்டுப்பாடு; என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை? : கனிமொழி MP!