Tamilnadu

கடுமையான தலைவலி இருக்கிறதா?... டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன? - நிபுணர்கள் சொல்லும் தகவல் !

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவி வரும் நிலையில், ஆளும் தவெக அரசு பெரிதாக எந்த ஒரு முன்னெடுப்பும் எடுக்காமல் இருந்து வருகிறது. நாள்தோறும் டெங்கு நோய் அதிகரித்த வண்ணமாகவே இருக்கிறது.

தமிழ்நாட்டில் நேற்று (செப்.21) மட்டும் ஒரே நாளில் 71 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 17,348 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுப்பி செய்யப்பட்டுள்ளது. அதோடு உண்ணிக் காய்ச்சலால் அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலைலி, இதுவரை 4,653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் காய்ச்சல் வந்த எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து மருத்துவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அவை வருமாறு :-

=> டெங்கு அறிகுறிகள் என்ன ?

* கடுமையான தலைவலி,

* தாங்கமுடியாத காய்ச்சல்,

* உடலில் திடீரென ஏற்படும் சிவப்புப் புள்ளிகள்,

* உதடு, நாக்கு மற்றும் வாய் உலர்ந்து போதல்,

* இதயத் துடிப்பு வழக்கத்தை விட அதிகரித்தல்,

* தொடர்ந்து ஏற்படும் வயிற்றுவலி,உடல்வலி,உடல்சோர்வு,

* தொடர்ச்சியான வாந்தி, மூட்டுவலி.

போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுகி மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

அதே போல டெங்கு பாதிப்பை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தவும், மருத்துவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

Also Read: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் : தேசிய அளவில் ட்ரெண்டான #TNEmpowersWomen.. அரசுக்கு குவியும் பாராட்டுகள்!