Tamilnadu

ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாள்தோறும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் என குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதோடு சிறார்களிடையே போதை பழக்கமும் அதிகரித்து வருகிறது.

இவை எவற்றுக்கும் பொறுப்பேற்காத தவெக அரசு, தாங்கள் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்பதை கூட உணராமல் திமுக மீது பழியை சுமத்தி வருகிறது. மேலும் இந்த சம்பவங்கள் குறித்து கேள்விகள் எழுப்பினாலும், அதனை வேண்டுமென்றே விஜய், அவரது அமைச்சர்கள் என அனைத்து தவெக-வினரும் சம்பந்தமில்லாத விஷயங்களை பசி மடைமாற்றம் செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு கோவையில் தொடர்ந்து அடுத்தடுத்து கொலை சம்பவம் அதிகரித்தே காணப்பட்டது. எனினும் அதனை கட்டுக்குள் கொண்டு வர விஜய் அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இந்த சூழலில் தற்போது நேற்று (செப்.19) ஒரே நாளில் மதுரையில் அடுத்தடுத்து தொடர்ந்து 3 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

சம்பவம் 1

=> சம்பவம் 1 :-

மதுரை, ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே சப்பாணி சரவணன் (50) என்பவர் வழக்கம்போல் அதிகாலை நேரத்தில் டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மறைத்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றிவளைத்து ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்க முயற்சித்தபோது அவர் அங்கிருந்து ஓடியுள்ளார். எனினும் விடாத அந்த கும்பல், அவரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்துள்ளது.

காவல் நிலையம் அருகே அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

=> சம்பவம் 2 :-

மதுரை மாவட்டம், திருமோகூர் அருகே வசிக்கும் அன்னமயில் (46) என்பவருக்கும், அவரது அண்ணன் மகன் ராஜ்குமார் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் இடப்பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ராஜ்குமார், அன்னமயிலை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, ராஜ்குமார் தப்பியோடினார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தப்பியோடிய ராஜ்குமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

=> சம்பவம் 3 :-

மதுரை மாவட்டம், மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வெட்டுக் காயங்களுடன் செல்லத்துரை (21) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். யார் இந்த செல்லத்துரை, இவரை யார் கொலை செய்தது என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- மதுரையில் நேற்று (செப்.19) ஒரே நாளில் 3 படுகொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உள்ளனர்.

Also Read: விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!