Tamilnadu
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
த. வெ. க. ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இதனைக் கட்டுப்படுத்தாமல் முதலமைச்சர் விஜய் வேடிக்கை பார்த்து வருகிறார். சட்டமன்றத்தில் கூட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனை குறித்துக் கேள்வி எழுப்பினார். ஆனால், முதலமைச்சர் விஜயோ இதற்குப் பதில் சொல்லாமல், சினிமாவில் கத்திக் கத்தி வசனம் பேசுவது போல் பேசி நழுவிச் சென்றுவிட்டார்.
த. வெ. க. ஆட்சியில் பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்று பார்த்தால், தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை அயனாவரத்தில் திருப்பதி குடை ஊர்வலப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம், த. வெ. க. நிர்வாகி மதன்ராஜ் உள்ளிட்ட சிலர் அத்துமீறி, அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் த.வெ.க.வினரால் சீருடையில் இருக்கும் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை எனத் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி அதிகாரப்பூர்வமாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”சமூக வலைதளங்களில் தங்களைக் கேள்வி கேட்கும் பெண்களை ஆபாசமாகத் திட்டித் தீர்க்கும் தவெக 'கீபோர்டு' பொறுப்பிகள், இப்போது அதிகாரம் கைக்கு வந்ததும் சீருடையில் இருக்கும் பெண் காவலர்களிடமே அத்துமீறத் தொடங்கிவிட்டார்கள்!
சென்னை அயனாவரத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய தவெக நிர்வாகியைப் பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால், பொதுமக்களிடம் சிக்கியவரைக் காப்பாற்றும் வகையில், தவெக எம்.எல்.ஏ ராம்குமார் காவல் நிலையத்திற்கே நேரில் சென்று அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
தன் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி பெண் காவலரிடம் அத்துமீறினால், தவெக எம்.எல்.ஏ அவனைக் காவல் நிலையத்துக்கே சென்று ரவுடியைப் போல் மீட்டு வருவார். ஆனால் இதையெல்லாம் தட்டிக் கேட்க வக்கற்ற அந்த 'டம்மி' முதலமைச்சரோ, சட்டமன்றத்தில் தவெகவினர் யாரும் காவல் நிலையத்தில் தலையிடுவதில்லை எனப் பொய் பேசுவார்.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கும், பெண்கள் பாதுகாப்பும் படுபாதாளத்தில் சென்று கொண்டிருக்க, நாட்டை ஆளத் துப்பில்லாத இந்த டம்மி முதலமைச்சரோ இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையுமின்றி, லண்டனில் சொகுசாக கார் ரேஸ் பார்த்து ரீல்ஸ் எடுப்பதில் பிஸியாக இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!
-
“தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!” : மு.க.ஸ்டாலின்!