Tamilnadu
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்தடையால் அவதியுறும் பொதுமக்கள், சில இடங்களில் 8 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடிப்பதாகக் கூறி, சாலை மறியல் மற்றும் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், த.வெ.க அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் கூட மின்தடை ஏற்பட்டு வருகிறது. இன்று கூட, வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திடீர் மின்வெட்டு ஏற்பட்டது.உண்மை நிலை இவ்வாறு இருக்க, மின்துறை அமைச்சர் நிர்மல்குமாரோ தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை எனத் தொடர்ந்து பொய்யானத் தகவல்களைக் கூறி வருகிறார்.
இந்நிலையில், "த.வெ.க-வின் அகராதியிலேயே Accountability , Responsibility என்ற வார்த்தைகளே கிடையாது போல" என்று தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து த.வெ.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”டம்மி முதலமைச்சர் முதல் பாத்ரூம் சுவற்றில் கதையெழுதும் மின்வெட்டுத் துறை அமைச்சர் வரை தவெக அகராதியிலேயே Accountability, Responsibility என்ற வார்த்தைகளே கிடையாது போல.
ஒரு தவறு நடந்தால் அதைச் சரி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை விட, அதை யார் மீது பழி போடலாம், வாடகை வாய்களை வைத்து எப்படிப் போலிச் செய்தி எனச் சொல்லலாம், எப்படித் திசை திருப்பலாம் என்றே எண்ணுகின்றனர்.
அதற்குப் போடும் அந்த முனைப்பைப் பிரச்சனையைச் சரி செய்யப் போட்டால், மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்!
இதோ தமிழ்நாடு முழுவதுமான அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள தவெகவினரும் அவர்தம் சகாக்களும். இந்த விடியோவ எடுத்து கக்கத்துல சொருகிட்டு கருத்து பேசுங்க நிர்மலு" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!