Tamilnadu
"இன்னும் எத்தனை உயிர்கள்?" - த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி ஆவேச கேள்வி!
மதுரை மாவட்டம் ஆனையூர் வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி யோகலட்சுமி. இந்தத் தம்பதியரின் மகன் தமிழ்ச்செல்வன், ஆரப்பாளையத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் விளையாடச் சென்ற மாணவன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மகன் கிடைக்காததால், இது குறித்துப் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
பின்னர், ஆனையூர் கழிவு நீரேற்று நிலையம் அருகே உள்ள முட்புதரில் மாணவன் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, "சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் த.வெ.க அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன?" என்று கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11ஆம் வகுப்பு மாணவன் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது. மாணவனின் மரணம் தொடர்பாக சமரசமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
அருவெறுப்பான உரை... : முதலமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க!
-
2 தொகுதி இடைத்தேர்தல்.. வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்.. தொடங்கிய கவுண்டவுன்!
-
மாணவர்களின் அயல்நாட்டு கல்விக் கனவு சிதைக்காதே : த.வெ.க அரசுக்கு SFI கண்டனம்!
-
விஜய் எல்லாம் இத்தகைய ஜென்மம்தான் : அசிங்கத்தின் கையில் தமிழ்நாடு... முரசொலி கடும் தாக்கு!
-
“எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குப்போய் ட்வீட்டா” : முதல்வர் விஜய்க்கு இ.பரந்தாமன் கடும் கண்டனம்!