Tamilnadu
உங்கள் மனதில் எவ்வளவு சாதிய வன்மம் : காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு திமுக ஐடி விங் கடும் கண்டனம்!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், சமூகநீதிக்கான பாதுகாப்பையே பின்னோக்கித் தள்ளக் கோரும் போராட்டத்தின் “UGC WAPAS LO” முழக்கத்தை பெருமையுடன் தூக்கிப் பிடிக்கிறார். தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு எதிரான மனுவாத அரசியலின் பக்கம் நிற்கிறதா? என - தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ” “UGC WAPAS LO” என்பது முழுக்க முழுக்க சமூகநீதிக்கு எதிரான முழக்கம் என்பது தெரிந்தும் இந்த பதிவை வெளிப்படையாக நீங்கள் போடுவது உங்களது மனுவாத நிலைப்பாட்டை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது அல்லவா !
SC/ST/OBC மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சந்திக்கும் சாதிய பாகுபாட்டை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட UGC Equity Regulations-ஐ திரும்பப் பெறச் சொல்லும் முழக்கம் அது என்பது நன்கு தெரிந்தும் இப்படி ஒரு பதிவு. உங்கள் மனதில் எவ்வளவு சாதிய வன்மம் !
இன்று நாட்டின் பல பகுதிகளில் மனுவாத அமைப்புகள் கையில் எடுத்திருக்கும் இந்த முழக்கம் இனி காங்கிரஸின் முழக்கம் என்கிறீர்கள் அப்படித்தானே !
ஒருபக்கம் சாதிவாரிக் கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு, சமூகநீதி என்று பேசும் காங்கிரஸ்…
மறுபக்கம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், சமூகநீதிக்கான பாதுகாப்பையே பின்னோக்கித் தள்ளக் கோரும் போராட்டத்தின் “UGC WAPAS LO” முழக்கத்தை பெருமையுடன் தூக்கிப் பிடிக்கிறார்!
அமித்ஷாவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சமூகநீதியையே எதிர்க்கும் முழக்கத்திற்குத் துணை போவீர்களா?
UGC விதிகளில் குறைகள் இருந்தால் திருத்தச் சொல்லுங்கள்.
பாதுகாப்புகளை மேலும் வலுப்படுத்தச் சொல்லுங்கள்.
ஆனால் “WAPAS LO” என்று யாருக்காகக் குரல் கொடுக்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு எதிரான மனுவாத அரசியலின் பக்கம் நிற்கிறதா?
மாணிக்கம் தாகூர் விளக்க வேண்டும்.
Social Justice cannot be selective" என தெரிவித்துள்ளது.
Also Read
-
டெல்டா மாவட்டங்கள் குறித்து கொஞ்சமாவது முதலமைச்சர் விஜய்க்கு கவலை இருக்கிறதா? : முரசொலி கடும் கண்டனம்!
-
“DMK 2.0-விற்கான பயணம் தொடங்கியது” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் : சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
-
GST சரிவால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : த.வெ.க அரசுக்கு கேள்வி எழுப்பிய டி.ஆர்.பி.ராஜா!
-
கச்சத்தீவு விவகாரம் : தவறான தகவல் சொல்லும் உறுப்பினர் - பேரவையில் விளக்கம் கொடுத்த எ.வ.வேலு!