Tamilnadu
இது சமூக அநீதி இல்லையா? மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுத்தால் நட்டம் வந்துவிடுமா?: தவெக அரசுக்கு தீபக் கேள்வி
கட்டணமில்லா பேருந்து சலுகை மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுத்தால் நட்டம் வந்துவிடுமா..? என த.வெ.க அரசுக்கு கழக மாற்றுத்திறனாளிகள் அணி செயலாளர் பேராசிரியர் தீபக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பேராசிரியர் தீபக் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 24-08-2026 திங்கட்கிழமை 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் திருவாளர் ஜோசப் விஜய் அவர்கள் இப்போது வழக்கத்தில் இருக்கும் மகளிர் கட்டணம் இல்லா பேருந்து திட்டத்தில் எல் எஸ் எஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வழக்கம் போல கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர் மாற்றும் வரிசையில் விடியல் பயணம் என்ற கழக கொண்டு வந்த திட்டத்திலன் மீது தனது ஸ்டிக்கரை ஒட்டி வெற்றி பயணம் என்று அறிவித்திருக்கிறார் வரவேற்கிறோம்.
ஆனால் உண்மையில் தவெக வின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது என்ன..? தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லா பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என்று தானே சொல்லப்பட்டது. உதாரணத்திற்கு சென்னையில் இருந்து திருச்சி செல்ல திருச்சியிலிருந்து மதுரை செல்ல மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்ல கன்னியாகுமரியில் இருந்து சென்னை வர ஆக மொத்தம் எங்கு பயணித்தாலும் மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவசம் என்ற பொருளில் தானே தேர்தல் வாக்குறுதியாக சொன்னார் திருவாளர் விஜய். உண்மை இப்படி இருக்க இன்று ஏற்கனவே கழக தலைவர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலே கொண்டுவரப்பட்டு இன்று வரை வழக்கத்தில் இருக்கும் அதே திட்டத்தில் கூடுதல் பேருந்துகளை மட்டும் சேர்த்து பெயர் மாற்றி புது அறிவிப்பு போல் அறிவித்திருப்பது நியாயம்தானா..?
சரி எல்லா சிறு விவசாய கடன் தள்ளுபடி என்று சொல்லி ஏமாற்றியது போல், மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று சொல்லி ஏமாற்றியது போல், எல்லா குடும்ப அட்டைக்கும் வருடத்திற்கு 6 சிலிண்டர் என்று சொல்லி இன்று வருடத்திற்கு இரண்டரை லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் அதாவது மாதம் 20,833 ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் ஆண்டுக்கு மூன்று சிலிண்டர் வழங்கப்படும் என்ற ஏமாற்று வேலை போல், இந்த அறிவிப்பையும் எடுத்துக் கொள்கிறோம் ஆனால் அந்த அறிவிப்பில் மாற்றுத்திறனாளிகள் என்று ஒரு சமூகம் இருக்கிறதே அது கொஞ்சமாவது இந்த அரசுக்கு முதலமைச்சருக்கு ஞாபகத்துக்கு வரவில்லையா..?
மாற்றுத்திறனாளிகள் நாங்கள் பயணிக்க வேண்டாமா..?பிரிக்க முடியாதது மாற்றுத்திறனாளிகளும் வறுமையும் என்பது போல் சமூகத்தில் விளும்பு நிலையில் வாழும் பின்தங்கியவர்களான மாற்றுத்திறனாளிகள் எங்களை கொஞ்சம் யோசிக்காத முதலமைச்சர் என்று நினைக்கும் போது மனம் வேதனை அடைகிறது.
இரண்டு கம்பு வைத்து காலில் கேலிபர் போட்டு நடக்க முடியாமல் நடந்து வரும் மாற்றுத் திறனாளிகள். குறுக்கு இடுப்பு எலும்பு உடைந்து போகிற அளவுக்கு சாய்ந்து தாங்கி தாங்கி ஒரு கால் வைத்து நடந்து வரும் மாற்றுத்திறனாளிகள். வாழ்க்கையே இருட்டு தான் என்றாலும் கூட தங்கள் தன்னம்பிக்கையால் இந்த உலகத்தை பார்க்கும் பார்வை மாற்றுத் திறனாளிகள். மற்றவரிடம் பேசாத வரை மற்றவர் தங்களை அணுகாத வரை தனக்கு ஊனம் இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் சமூகத்தில் வாழும் பேச முடியாத காது கேட்க முடியாத மாற்றுத்திறனாளிகள். மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் நிலைமையோ இன்னும் துயரம் அந்த குழந்தைகளை பராமரித்து அல்லல்படும் பெற்றோர்களின் நிலைமை வார்த்தைகளால் சொல்ல முடியாதது. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடைய பிரச்சனைகளை சொல்ல முற்பட்டால் ஒரு இன்சைக்கிளோபீடியாவே போடலாம் அவ்வளவு வாழ்க்கை சிக்கல் மேற்குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகளின் கிராமப்புறங்களில் இருக்கக்கூடியவர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியது அரைகுறை அறிவிப்பாக இருந்தாலும் இன்றைய அறிவிப்பில் இப்படிப்பட்ட மாற்றுத்திறனாளிகளையும் மனதில் கொண்டு அவர் நலனில் கவனம் செலுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களை பராமரிப்பவர்களுக்கும் அல்லது துணையாய் வருபவர்களுக்கும் கட்டணம் இல்லை என்று அறிவித்திருந்தால் போக்குவரத்து கழகத்திற்கு ஏதேனும் நட்டம் ஏற்பட்டு விடுமா..?
இது போன்ற விளிம்பு நிலையில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் சலுகை காட்டாமல் எம்எல்ஏக்களுக்கு காரும் மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பராமரிப்பு மற்றும் உதவியாளர் படியும் அறிவிப்பது எந்த விதத்தில் நியாயம் இது மிகப்பெரிய சமூக அநீதி இல்லையா..?
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பத்திரிக்கைகளைப் பற்றி இப்படிப் பேசக் கூடாது” : பேரவையில் தவெக அமைச்சருக்கு அறிவுரை வழங்கிய தி.மு.க!
-
பரந்தூர் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? – பேரவையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
-
“தமிழர்கள் படுகொ* செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது; த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்குமா?” : உதயநிதி கேள்வி!
-
“அருமை நண்பர் கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு : தி.மு.க ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேறிய தீர்மானம் என்ன?